செய்திகள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ; பலி எண்ணிக்கை 25

Makkal Kural Official

மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்த பொது சுகாதாரத்துறை

நியூயார்க், ஜன. 13–

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 12 ஆயித்துக்கும் மேலான கட்டுமானங்கள், உருக்குலைந்துள்ள லாஞ் ஏஞ்சல்ஸில் மருத்துவ அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணி 6 வது நாளாக நீடிக்கிறது. ஹாலிவுட் நகரம், கனவு நகரம் என குறிப்பிடப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 6 முக்கிய பகுதிகளிலும் காட்டுத் தீ பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸின் ஆடம்பரமான பகுதியான பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியின் பெரும்பாலான பகுதி தீக்கு இரையாகியுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி பாலிசேட்ஸ் பகுதியில்தான் முதலில் காட்டுத் தீ பற்றியது. அந்த காட்டுத் தீ கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியமு தற்போது ஈடன், கென்னத் உள்ளிட்ட 6 பகுதிகளில் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீ பரவி வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு சாம்பலாகியுள்ளது. ஏராளமான வீடுகள், பிரபலங்களின் ஆடம்பர பங்களாக்கள், வணிக வளாகங்கள் என பல கட்டடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.

25 பேர் பலி

பச்சை பசுமையாக இருந்த பாலிசேட்ஸ் பகுதி தற்போது கருகி போயுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர் என லாஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே காட்டுத் தீயால் காற்றில் புகை மற்றும் சாம்பல் அதிகளவில் காணப்படுவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பொது சுகாதார அதிகாரத்துறை வலியுறுத்தியுள்ளது. காட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள புகை மற்றும் சாம்பல் துகல்களால் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதால் அங்கு மருத்துவ அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஏராளமான மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் உலகின் மிகவும் அதிநவீன சொகுசு விடுதியான பசுபிக் பாலிசேட்ஸ் என்ற பெயரிலான சொகுசு விடுதியும் காட்டுத் தீயில் சிக்கி எலும்புக்கூடானது. இந்த ஹோட்டலின் மதிப்பு 10,375 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் 12,000 க்கும் மேலான கட்டுமானங்கள் உருக்குலைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *