தலையங்கம்
அமெரிக்கத் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் முக்கிய வேட்பாளராக இருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு அதிர்ச்சிகரமான கொலை முயற்சிகள் நடந்து இருப்பது அந்நாட்டு ஜனநாயக சிந்தனைகள் களங்கம் பெற்று இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.ஜூலை 13ஆம் தேதி, பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலால் அவரது காதோரம் சிராய்த்து காயம் ஏற்படுத்தியது.
இம்மாத முதல்வாரத்தில், ஒரு ஃப்ளோரிடா கோல்ஃப் மைதானத்தில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச் சூடு தாக்குதல் முயற்சியை அரங்கேறாது தடுத்து நிறுத்திய ரகசிய பாதுகாவலர்கள் பணி அபாரமானது.
மொத்ததில் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
50 நாட்களில் தேர்தல் நாள் என்பதால்
டிரம்ப் மற்றும் அலரது கணவை சிதைக்க விஸ்வரூபம் எடுத்து வரும் துனை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இருவரும் ஒருவருக்கொருவர் நாட்டுக்கு அபாயமாக
இருக்கிறார்கள் .போட்டா போட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
டிரம்பின் எச்சரிக்கைகள் உண்மையானதாக இருப்பதால் இந்த கொலை முயற்சிகள் வெற்றிபெறவில்லை ?
ஆனால் அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் கமலா ஹாரிஸ்சின் கைப் பாவைகளாக செயல்படுவதும் அப்பட்டமாகவே தெரிகிறது.
டிரம்ப் மீது வீசப்படும் குற்றச்சாட்டுகளே பிரதான செய்திகளாய் இருக்கிறது.
கமலா ஹாரிஸின் களப் பிரசார விளம்பரங்கள், டிரம்பை நாட்டின் எதிரி எனக் கூறி, அவரை ஜனநாயகத்திற்கு அபாயம் எனத் திட்டுவதாக இருக்கின்றன. ஆனால் சட்டப்படி அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்பதைப் பார்க்கும் போது இவையெல்லாம் தேர்தல் பேச்சுக்கள் மட்டுமே எனப்புரிகிறது! அதாவது துணை ஜனாதிபதியும் கூட தரைமட்ட தீப்பொறி பேச்சாளர் போல் அல்லவா செயல்படுகிறார்!
மறுபுறம், டிரம்ப் தேர்தல் முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பதை ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.
மொத்ததில் 400 வருட ஜனநாயகத்தில் தேர்தல் நம்பகத்தன்மை மீது கவலைகொண்டாலும் ஊடகங்கள் அதை பரிசீலிக்க கூடத் தயங்குகின்றன.
டிரம்பின் பிரச்சாரம் உக்ரைனில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் என்ற உறுதியும் மக்களுக்கு வேலை வாய்ப்பை மேம்படுத்துவேன் என்ற உறுதியும் அமெரிக்கா மக்கள் ஆதரவை பெறக்கூடாது என்பதை உறுதி செய்து வருகிறது அமெரிக்க ஊடகங்கள்!
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள லத்தீன் மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரு மிகப்பெரிய கேள்வி கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட்டா ?என்பதே.
இப்படி சமீபமாக அனைவராலும் பேசப்பட காரணம், தீவிர இடதுசாரி கட்சியான அமெரிக்காவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் (Revolutionary Communists of America) சின்னத்தின் முன்பு கமலா ஹாரிஸும் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிம் வால்ஸும் நின்றிருக்கும் வீடியோ தான்.
இந்த வீடியோ உண்மையா என்றால் இல்லை. டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களாக அறியப்படும் தில்லே மீம் குழு (Diley Meme Team) தான் இப்படி ஒரு வீடியோவை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது.
இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். ஸ்பானீஷ் மொழி பேசும் மக்களால் இணையத்திலும் ஆஃப்லைனிலும் அதிகமாக பகிரப்பட்டுள்ளது இந்த வீடியோ.அமெரிக்காவில் 36.2 மில்லியன் லத்தீன் மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள், அவர்களை இப்படியா குழப்புவது?அது மட்டுமா? சமீபத்து நேரடி விவாதத்தின் போது கமலாவையும் அவருடைய அப்பாவையும் கம்யூனிஸ்ட்டுகள் என்று டிரம்ப் கூறினார். புலம்பெயர் மக்களுக்கான கொள்கைகள் மூலமாக அமெரிக்காவை வெனிசுவேலா போல மாற்றிவிடுவார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மொத்ததில் 2024 தேர்தல் டிரம்ப் அல்லது ஹாரிஸ் பற்றியதல்ல, அமெரிக்காவின் எதிர்காலத்தைப் பற்றியது.