ரகுவுக்கு திடீரென மனச் சோர்வாகவே இருந்தது.
சில நேரங்களில் தலைவலியும் இருக்கும். ‘டிப்ரஷன்’ நிலைக்கும் போய்விடுவான். அவனுக்கு என்னவோ ஏதோ என்று அம்மாவும் பயப்பட ஆரம்பித்து விட்டாள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் சொன்னாள். மருத்துவர்கள் ரகு நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். சில நேரங்களில் பித்துப் பிடித்தாற்போல் ஜடமாக உட்காரந்திருப்பான். திடீரென தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. நாளுக்கு நாள் தற்கொலை எண்ணம் வலுவடையத் தொடங்கியது. எப்போதும் அந்த நினைவை எப்படி செயல்படுத்துவது என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டான். தற்கொலை முயற்சிக்கு எது சிறந்தது என்று திட்டமிட ஆரம்பித்து விட்டான்.
கண் காணாத இடத்திற்கு சென்று விஷம் அருந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தான். அங்கேயே மழைநீர், புயல் இவற்றில் சிக்கி உடம்பு சின்னாபின்னப்பட்டு அடையாளம் காணமுடியாதபடி மாறிவிட வேண்டும் என்று விரும்பினான். அதை செயல்படுத்தவும் தொடங்கி விட்டான்.
பத்து நாட்கள் சென்றது. ஒரு மலைத்தொடரை தேர்ந்தெடுத்தான். கால் போன போக்கில் நடந்தான். ஒரு சிற்றூரை வந்து அடைந்தான். அந்த ஊரில் ஆங்காங்கே பாம்பு படம் நடப்பட்டிருந்தது. ரகுவும் அப்போது எல்லாம் இதைப் பற்றி பயப்படவில்லை. அங்கேயே ஓரிடத்தில் படுத்து விட்டான்.
விஷ பாட்டிலும் கைவசமிருந்தது. அதைத் திறக்கும் சமயம் சுருக்கென்று காலில் ஏதோ சுருக்கென்று குத்தியது போல் இருந்தது. அவன் மயங்கியது போல் தோன்றியதே தவிர என்ன நடந்தது என்று அவனால் உணர முடியவில்லை.
சுமார் ஏழாண்டு கழித்து அவன் நினைவுதிரும்பியது. அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
மேலும் அவன் தன்திறமையை மேம்படுத்தி அவன் வாழ்வை வளமாக்கினான்.
அவன் இப்போது வாழ்வின் சிகரத்தில் இருந்தான்.
உடலிலே ஒரு மினுமினுப்பு . கண்களில் ஒரு ஜொலிப்பு தெரிந்தது. ரத்தத்தின் பிளேட்லெட்ஸ் ஏறி இருந்தது. தொழிலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளான். மனைவி, குழந்தைகள், கார், பங்களா என்று உச்சகட்ட வசதியில் இருந்தான்.
ஒரு நாள் தான் முன்பு சென்ற அதே மலைத்தொடரில் இருந்த சிறு கிராமத்திற்கு வந்தான். முன்பு இருந்த மருத்துவமனைக்குச் சென்றடைந்தான். பழைய மருத்துவ பதிவுகளை படித்துப் பார்த்தான். தனக்கு என்ன நடந்தது என்றும் புரிந்து கொண்டான்.
ஆம்., அவனை ஒரு ராஜநாகம் தீண்டியது தெரிய வந்தது. மயங்கியது வரை அவனுக்கு நினைவு வந்தது. அப்போது அவ்வழியே வந்த வழிப்போக்கர்கள் சிலர் அவனை மருத்துவமனையில் சேர்த்து பாம்பு விஷத்தை முறித்து விட்டனர். சிறிய அளவில் விஷம் உடலில் கலந்ததால் ரகுவும் பிழைத்து விட்டான்.
ரகுவுக்கு ஏற்பட்டது மூளையில் புற்றுநோய் ஆகும். அந்தச் சிறுதுளி விஷம் அந்த நோயை குணமாக்கி விட்டது.
அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும் என்பது பழமொழி.
சிறிய துளி விஷம் பெரிய நோயை குணமாக்கி அமுதமாக்கியது புதுமை.