நாமும் பல அமானுஷ்ய நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்டோம். இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கோனேரிராஜபுரம் நடராஜரைப் பற்றிய சில அமானுஷ்யங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ஊரை ஆண்ட வரகுணபாண்டியன் தன் அரசவை சிற்பியை கூப்பிட்டு தனக்கு ஒரு உதவி தேவைப்படுவதாகக் கூறினார். நம் ஊரில் ஒரு பெரிய நடராஜர் சிலை செய்து கோவிலில் வைத்து வணங்க வேண்டும் என்றார் அவர். அதற்கேற்றார் போல் நீங்கள் தான் சிலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். சரி என்று சிலை செய்யவும் சம்மதித்து விட்டார் சிற்பி.
ஒரு பெரிய ஐம்பொன்னால் செய்யலாம் என்று யோசனை கூறினார். தேவையான அனைத்து பொருள் உதவியும் தானே செய்வதாக மன்னனும் சம்மதித்து விட்டார்.
ஒரு நல்ல முகூர்த்த நாளில் சிலை செய்யும் வேலையையும் ஆரம்பித்தார்கள். 3 அடி உயரம் சிலையாது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு சிலை சேதாரம் ஆகிவிடும். இப்படியே மேலும் 3 தடவை நடந்தது. மன்னன் சொன்ன கெடு நாளும் நெருங்கியது. மன்னன் ஒரு நாள் நேரில் பார்வையிட வந்தார்.
சிலை இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் மன்னன். சிற்பியும் நடந்த விபரங்களைக் கூறினார். எப்படியும் குறிப்பிட்ட நாளில் சிலைய முடித்துக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி விட்டு திரும்பினார் வரகுண பாண்டியன்.
2 நாட்கள் கழித்து மறுபடியும் குறிப்பிட்ட உலோகங்களைக் கலந்து கொதிக்க வைத்தார் சிற்பி. நல்ல கொதி நிலையில் அந்த உலோகக் குழம்புகள் இருந்தன.
அந்த வழியே ஒரு வயோதிகத் தம்பதியினர் வந்தனர்.சிற்பியிடம் தாகமாக இருப்பதால் குடிக்க தண்ணீர் கேட்டனர். சிற்பி மனக்கஷ்டத்தில் இருந்ததால் வேறு எங்காவது வாங்கிக் குடியுங்கள் என்று அலட்சியமாகக் கூறினார். எனினும் அந்த தம்பதியினர் வேறு எவரும் தர மறுத்துவிட்டார்கள். நீங்கள் தான் கொடுக்க வேண்டும் கூறினார்கள். அதைக் கேட்ட அந்த சிற்பி இதோ கொதித்து கொண்டிருக்கும் உலோகக் குழம்பை காட்டி வேண்டுமானால் இதைக் குடியுங்கள் என்று கோபமாக கூறினார்.
ஆனாலும் அந்த வயதான தம்பதியின் மறுக்காமல் அதை குடித்து விட்டனர். என்ன அதிசயம்! அந்த இருவரும் மன்னன் கூறியபடி 7 அடி உயர நடராஜர் சிலையும் மங்கள நாயகி தாயாருமாக மாறி விட்டனர்.
சிற்பியும் நடராஜர் சிலையைப் பார்த்து பிரமித்து விட்டார். கருவறையில் வைத்து கும்பாபிஷேகமும் சிறந்த முறையில் நடந்தது. வந்து பார்த்தவர்கள் கண்ணுக்கு ஒரு அமானுஷ்யம் தென்பட்டது. அது என்னவென்றால் நடராஜரின் உள்ளங்கையில் மனிதனுக்கு உள்ளதுபோல் கை ரேகைகள் இருந்தன. கன்னத்திலும் ஒரு பெரிய மரு இருந்தது. அந்த வயோதிக தம்பதியினருக்கு இருந்தது போலவே நடராஜர் சிலையிலும் இருந்தன.
தான் கண்டது நடராஜரையும் மங்கள நாயகித் தாயாரைமா என்று மெய்சிலித்துப் போனார்.
அடுத்த அமானுஷ்யம் :
ஒரு தடவை கொலுப் பார்ப்பதற்காக பொம்மைக் கடைக்கு போனேன். சில முக்கிய தானங்களை வைத்து கொலு வைக்க முடிவு செய்தேன். உடல் தானத்திற்கு என்று அத்திவரதர் பொம்மையைத் தேடிப் பார்த்தேன் எதுவும் மனதிற்குப் பிடிக்கவில்லை. கடைசியில் ஒரு அத்திவரதர் வரதர் பொம்மை மனதிற்கு பிடித்தது. அருகில் போய் அந்த அத்திவரதரைப் பார்த்தேன்.
அந்த அத்திவரதர் வரதர் பொம்மை என்னைப் பார்த்து கண்களை திறந்து பார்ப்பதுபோல் தோன்றியது. அந்த பொம்மையையும் நான் வாங்கி விட்டேன். ஏதோ மனப் பிரமை தான் என்று தான் நினைத்தேன்.
ஒரு வாரம் கழித்து ஒழுங்காக அடிக்கினேன். சில தான தர்மங்கள் என்று அந்த படியில் வைத்தேன். அன்னதானம், கல்வி, பொருட்கள் தான தர்மங்கள் என்று அந்தப் படியில் வைத்தேன். அன்னம், வஸ்திரம், கல்வி, பொருள் தானம் என்று வைத்தேன். பிறகு உடல் தானம் என்று அந்த அத்திவரதரை வைத்தேன். நம்ப முடியவில்லை. அந்த பொம்மையின் செயலை தன் கண் இமைகளை உயர்த்தி ஏழெட்டுத் தடனை கண் புருவங்களையும் இமைகளையும் மூடித் திறந்தன. நான் ஏதோ பிளாஸ்டிக் பொம்மை மாதிரிபோலும் என்று முதலில் நினைத்தேன். உண்மையில் அது மரபொம்மை தான். புருவங்கள் ஒரு சிறிய பெயிண்டிங் மட்டுமே ஈரந்தன. உண்மையில் இது ஒரு அமானுஷ்ய சக்தி தான் நான் நேரில் கண்டது.
![]()





