நாகம் இந்து மதத்தில் முக்கிய இடம் பெற்றதாகும்.
சிவனுடைய ஆபரணம். பெருமாளுக்கு பஞ்சனை, முருகனுடைய மயில் நாகத்தை பிடித்திருக்கும். காலில். பிள்ளையாருக்கு இடுப்பில் பெல்ட் ஆகும். இப்படி நம் தெய்வங்களுடன் இணைந்தது நாகம்.
இந்த நாகத்தை ஒரு கூட்டமாகக் கொண்டது நாகன் கூட்டம் என்பதாகும். இது அருப்புக்கோட்டையில் ஒரு பிரிவினர் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டின் முதல் குழந்தைக்கு நாக என்று ஆரம்பிக்கும் பெயர் வைக்க வேண்டும்.
ஆண் குழந்தை என்றால் நாகராஜன், நாகசாமி, நாகவேல் என்று பெயரிட வேண்டும். பெண் குழந்தை என்றால் நாகரத்தினம், நாகஜோதி, நாகமணி என்று பெயர் வைக்க வேண்டும்.
இந்த குடும்பத்தின் ஒரு மருமகள் பெயர் மீனாட்சி அம்மாள். அந்த அம்மாள் தன் மூத்த பெண் குழந்தைக்கு தன் மாமியார் பெயர் வைக்க நினைத்து மீனம்மாள் என்று வைத்து விட்டாள். அடுத்த பெண் குழந்தைக்கு ஜீவரத்தினம் என்று பெயர் வைத்தார்கள். ஜீவரத்தினம் என்றால் கருநாகம் தன் வாயில் விஷத்தை எல்லாம் சேர்த்து ஜொலிக்க வைக்கும் அதிசய கல். இந்த ஜீவரத்தினத்தை வெளியில் வரவழைத்த உடனேயே நாகம் இறந்துவிடும். அடுத்த 4 குழந்தைகளும் அந்த மீனாட்சி அம்மாளுக்கு பையன்கள் பிறந்தன. எனினும் 4வது பையன் வயிற்றில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது தன் பெயரை வைக்க வேண்டும். அந்த பாட்டியின் வயிற்றின் மேல் ஏறி ஊர்ந்து வந்தது. பாட்டி உடனே தன் தவறை உணர்ந்து தான் அந்தக் குழந்தைக்கு உன் பெயரையே வைக்கிறேன் என்று மனமுருக வேண்டினாள்.
ஆனாலும் எதிர்பாராத விதமாக 3வது பையன் இறந்து விடவே அந்தப் பையனின் பெயரையே 4வது பையனுக்கும் வைக்க நேரிட்டது. ஆனால் பாட்டி மட்டும் அந்த 4வது பையனின் முதல் குழந்தைக்கு உன் பெயர் வைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாள்.
தன் பேரன் பெயர் என்று நாகராஜ் அதன்படியே கூப்பிடுவார்கள். காலங்கள் உருண்டோடியது. நாகராஜ் என்ற பெயரும் பாட்டியோடு போய் விட்டது. அவனுக்கும் திருமணமாகி குழந்தையும் பிறக்க நேரிட்டது. அந்த குழந்தைக்கு நாகநந்தினி என்று பெயரிட தீர்மானித்தனர். எனினும் சூழ்நிலை காரணமாக பிரியதர்ஷினி என்று பெயர் வைக்க நேரிட்டது.
பெயரிடும் விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடியோவும் எடுக்கப்பட்டது. ஆனால் ‘நாகநந்தினி’ என்ற பெயர் குழந்தையின் காதில் சொல்லப்படவில்லை.
ஒரு நாள் அம்மா வீட்டுப் பாட்டி வீட்டில் அந்த பெயர் சூட்டும் விழா கேசட்டைப் போட்டுப் பார்க்க நேரிட்டது. அப்போது நாகம் பழி வாங்க நினைத்தது. தன் பெயர் வைக்கவில்லையென்று. பாம்பும் வீட்டினுள் சீற்றத்துடன் வர நினைத்தது. ஆனால் எல்லா கதவுகளும் பூட்டப்பட்டிருந்தன. சன்னல் வழியாக வர நினைத்தது. பாம்பை பார்க்க நேரிட்டது. ஆனால் உள்ளே வர முடியவில்லை.
ஒரு மாதம் கழித்து குழந்தையும் தாயும் சென்னையில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் பெயர் சூட்டும் விழா கேசட்டைப் பார்க்க ஆவலோடு காத்திருந்தார்கள். கேசட்டை போட்ட உடனேயே ஒரு நாகம் ஒன்று மடமடவென்று வீட்டிற்குள் வந்து விட்டது. பிரியாவின் பாட்டி டிவி அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். பாம்பு வந்தவுடன் தான் காரணம் புரிந்தது. உடனே பாட்டி ‘‘பாம்புலம்மா’ மன்னித்து விடு தாயே! உன் சன்னிதிக்கு வந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். திருமணம் ஆகும் வரை நாகநந்தினி என்ற பெயர் நிலைக்கும் என்று சொன்னவுடனே பாம்பு 3 முறை மன்னித்ததற்கு அடையாளமாக 3 முறை தலையை வீட்டுத் தரையில் தட்டிவிட்டு தானாகவே பின்னோக்கிச் சென்று மறைந்து விட்டது.
பாட்டி மருமகளிடம் சொன்னாள். ஏதாவது புற்றில் பால் ஊற்றி விடவும். பின் குழந்தையின் காதல் நாகநந்தினி என்று 3 முறை கூப்பிட்டோம்.
பிறகு ஆண்டுகள் 25 ஆனது. திருமணமும் சிறப்பாக நடந்தது. அமெரிக்கா சென்று விட்டாள். 3 வருடங்கள் ஓடி விட்டன. எல்லோரும் குழந்தை வரவில்லை என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்தபோது
ஒரு நாள் பிரியதர்ஷினியின் பாட்டி தன் ஆபீஸில் சேரில் உட்கார்ந்திருந்தாள். ஒரு நாகப்பாம்பு கேட்டின் மேல் ஏறி பாட்டியை பார்த்து ஆசி வழங்கியது. பாட்டியைப் பார்த்து ஆசி வழங்கியதுடன் கீழே இறங்கிப் போய் விட்டது. உள்ளே கூட இறங்கி வரவில்லை. என்ன அதிசயம்! 2 நாள் கழித்து தான் கன்ஸீவ் ஆகியிருப்பதாக பிரியா சொன்னாள். இதை மானுஷ்யம் என்பதா! ஆச்சரியமான விஷயம் என்பதா! நாகத்தின் சக்தி என்பதா!
![]()





