செய்திகள்

அமலாக்கத்துறை சோதனை:ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ.30 கோடி சிக்கியது

ராஞ்சி, மே 6–

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் அலாம்கிர் ஆலமின் உதவியாளரின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த 30 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலாம்கிர் ஆலன். ஜார்க்கண்ட் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் வீரேந்திர ராம் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார்களும் உள்ளது. இதனையடுத்து அமலாக்கத்துறை களமிறங்கியது.

ஜார்க்கண்ட் அமைச்சர் அலாம்கிர் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சஞ்சீவ் லால் வீட்டில் குவியல் குவியலாக ரூ30 கோடி வரையிலான ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம் எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *