சென்னை, மார்ச். 13
அப்போலோ குரூப் மற்றொரு சாதனையாக, அப்போலோ மகளிர் மருத்துவமனை இன்று பெண்கள் சுகாதாரப் பராமரிப்பில் 10 ஆண்டு கால சிறப்புமிக்க சேவை, அர்ப்பணிப்பு மற்றும் புதுமையை கொண்டாடியது. தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை வழங்குகிறது.
இதுபாதுகாப்பான பிரசவங்களை உறுதிசெய்து, அதிக ஆபத்துள்ள பிரச்னைகளை எளிதாக வழிநடத்தி, சிறந்த சிகிச்சையை மேற்கொண்டு வருகிறது. அப்போலோ மகளிர் மருத்துவமனையின் தொலைநோக்குப் பார்வையானது நம்பிக்கை, குணப்படுத்துதல் மற்றும் மருத்துவ சிறப்பின் மரபாக இன்று மாறியுள்ளது.
இந்த மைல்கல் சாதனையனது மருத்துவமனையின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற உயிர்களை மனிதநேயத்துடன் தொட்ட பிராண்டின் செயல்பாட்டுக்கு ஒரு சான்றாகும். மகப்பேறு சிகிச்சையில் 7500க்கும் மேற்பட்ட பிரசவங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதே நேரத்தில் மகளிர் மருத்துவ குழு 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை சிறப்பாகச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி கூறுகையில், “இந்த 10 ஆண்டு மைல்கல் சாதனையை நாங்கள் பெருமையுடனும், பொறுப்புணர்வுடனும் கொண்டாடுகிறோம். இது கடந்த காலத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பும் ஆகும். மருத்துவ சிறப்பின் எல்லைகளை நாங்கள் தொடர்ந்து தாண்டிச் செல்வோம். புதுமைகளைத் தழுவுவோம். தவிர, ஒவ்வொரு தாய்க்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் மிக உயர்ந்த தரமான பராமரிப்பை வழங்குவோம் என்றார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் குழுவை நான் பாராட்டுகிறேன். மேலும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் மனிதநேயத்துக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் நோயாளிகளை முதன்மையாக கவனித்துக் கொள்ளும் பராமரிப்பு மாதிரியின் மூலம் எண்ணற்ற வாழ்க்கையை நாங்கள் உண்மையிலேயே மாற்றி அமைத்துள்ளோம்” என்றார் அவர்.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இந்த மருத்துவமனை பல மருத்துவ அற்புதங்களை நடத்தியுள்ளது. உதாரணமாக, வெற்றிகரமாக ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பேஸ்மேக்கர் பொருத்துதல் மற்றும் பிற சிக்கலான நிலைமைகளையும் உயரிய சிகிச்சை மூலம் கையாண்டுள்ளது. தவிர, மருத்துவமனை அதன் IVF சேவைகளையும் விரிவுபடுத்தியுள்ளது. குடும்பங்களுக்கு நம்பிக்கையை அளித்து, பெற்றோர்களாக வேண்டுமென்ற ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளையும் நிறைவேற்ற உதவுகிறது.
பெண்களின் நல்வாழ்வைப் புத்துயிர் பெற செய்யவும்,பெண் நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய தனித்துவமான கவலைகளை நிவர்த்தி செய்யவும் விரைவில் ஒரு அழகு சாதன மகளிர் மருத்துவ கிளினிக்கைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.இது வரும் ஆண்டுகளில் Ob–-Gyn துறை மற்றும் குழந்தை பராமரிப்பில் மேம்பட்ட பயிற்சியை உறுதியளிக்கிறது. தவிர, மருத்துவமனை தற்போது 100% தேர்ச்சி விகிதத்துடன் பல கல்வித் திட்டங்களையும் நடத்துகிறது.