சிறுகதை

அப்பா!-வேலூர்.வெ.இராம்குமார்

“அப்பா!பெரியப்பா உங்களை பார்க்க வந்திருக்காரு. வீட்டு ஹால் ல உட்கார வெச்சிருக்கேன் என்றான் கண்ணன்..”

“அதைக் கேட்டதும் உதயகுமாருக்கு அதிர்ச்சியாப இருந்தது..டேய்!நீ தெரிஞ்சுதான் செஞ்சீயா..அவரை பற்றி தெரிஞ்சும் எப்படிடா உள்ளே விட்டே?

“நொடிஞ்சு போய் வந்திருக்காருப்பா..பிளீஸ் கீழே வாங்க!

“உடனே மாடியிலிருந்து இறங்கியவர்,தன் அண்ணனை பார்த்ததும் அதிர்ச்சியில் நின்றார்..”

“டேய் தம்பீ!என்னை மன்னிச்சிடுடா..என் ஒரே பையன் என்னைவிட்டுட்டு போய்ட்டான்..நம்ம குடும்ப சொத்துக்காக ஆசைப்பட்டு,குடிகாரனான உனக்கு நான் குடியை வாங்கி கொடுத்தே உன் சொத்தையும் என் பேர்ல எழுதி வாங்கினதற்கு கடவுள் எனக்கு சரியான தண்டணை கொடுத்து,என் மகனை சாகடிச்சுட்டாரு.இதுக்கப்புறமா இந்த சொத்துக்களை வெச்சு நான் என்ன பண்ணப் போறேன்..உனக்கு நான் செஞ்ச பாவத்துக்கு அபகரிச்ச உன் சொத்தையும் என் சொத்துகளையும் உன் ஒரே.வாரிசு கண்ணன் பேர்லேயே எழுதிட்டேன்..”

“என்ன பெரியப்பா இதெல்லாம்..நானும்,அப்பாவும் பணம்,சொத்துக்கு அலையறவங்கன்னு நினைச்சீங்களா?

“இல்லேப்பா..உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்..வாரிசேயில்லாத எனக்கு இனி நீதான் வாரிசு.இந்த சொத்தை உனக்கு கொடுக்கறதுல எனக்கு வருத்தமேயில்லை..நான் செஞ்ச நம்பிக்கை துரோகத்தை உங்கப்பன் மறக்கவும் மன்னிக்கவும்மாட்டான்.அதனால,இந்த சொத்து பத்திரங்களை கொடுக்க வந்தேன்.நானும்,என் மனைவியும் இனி நிம்மதியா காசியாத்திரை கிளம்புவோம் என கூறிவிட்டு,உதயகுமாரை பார்த்து என்னை மன்னிச்சுடுடா..என கூறிவிட்டு கிளம்பினார்..”

“கடவுள் இருக்காருப்பா..உங்களை ஏமாத்தின நம்மளை அந்த கடவுளே தண்டிச்சுட்டாரு.நம்ம பங்கு மட்டுமல்,பெரியப்பாவோட பங்கையும் கொடுத்திட்டாரு..இந்தாங்க பத்திரம் என கூறியபடியே சொத்து பத்திரத்தை தந்தையிடம் திணித்தான் கண்ணன்..”

“உதயகுமாருக்கு ஏனோ,இப்போது தன்னை ஏமாற்றிய அண்ணனை பழிவாங்க அவருடைய ஒரே.வாரிசை,காரை ஏற்றி தானே கொன்றது நினைவுக்கு வந்து போனது..தன்னையறியாமல்.அழ ஆரம்பித்தார்..”

“ஏம்ப்பா அழறீங்க..உங்களோடு சேர்ந்து உண்மையும் ஜெயிச்சிடுச்சுப்பா..”

“எங்க அண்ணனோட உண்மையான குணத்துக்கு முன்னாடி நான் தோத்துட்டேண்டா..முதல்ல,நீ போலீசுக்கு போன் பண்ணு..உண்மையை சொல்லி நான் சரணடஞ்சாகணும்!

“தன் தந்தையை இப்போது புரியாமல்,அதிர்ச்சியுடன் பார்த்தான் கண்ணன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *