சிறுகதை

அப்பாவின் மகள் – ராஜா செல்லமுத்து

பள்ளிக்கூடம் முடிகிறதோ இல்லையோ விறுவிறுவென ஓடி வந்து அப்பா சரவணன் கையில் இருக்கும் மொபைல் போனை எடுத்து அரை மணி நேரம் பார்த்து விட்டுத்தான் கொடுப்பாள் யுவந்திகா .

அப்பா சரவணன் அதற்கு மறுப்பு ஏதும் சொல்ல மாட்டார் .தலைப்பிள்ளை யுவந்திகா என்பதால் கொள்ளை பிரியம் சரவணனுக்கு.

அதனால் யாருக்காவது முக்கியமான நபர்களுக்கு பேச வேண்டி இருந்தாலும் கூட தன் மகள் பறித்துக் கொண்டு போகும் செல்போனுக்கு மறுப்பு ஏதும் சொல்ல மாட்டார்.

அந்த பிஞ்சுக் குழந்தை மொபைலில் எதை எதையோ பார்த்து, ரசித்து சிரித்துக் கொடுக்கும் வரை அமைதியாக அமர்ந்திருப்பார் சரவணன்.

யுவந்திகா ஏது செய்தாலும் அவர் தட்டி கேட்பதும் இல்லை. அரட்டி பேசுவதுமில்லை . அந்த குழந்தையின் மீது அப்படி ஒரு அலாதி பாசம் சரவணனுக்கு.

அடுத்ததாகப் பிறந்த பெண் குழந்தையும் அப்படியே எண்ணுவார்.

யாராவது இரண்டும் பெண் பிள்ளையாகப் பாேச்சே என்று வருத்தப்பட்டால் கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டே சொல்வார் சரவணன்

என்ன இப்படி சொல்லிட்டீங்க ? ஒன்னு சரஸ்வதி. இன்னாென்னு லட்சுமி என்று சொல்வார் சரவணன்.

எனக்கு ஆம்பள புள்ளைகள விட பெண் பிள்ளைகள் தான் எனக்கு கொள்ளை பிரியம் என்று சொன்ன சரவணனை பார்த்தவன், வாயடைத்து போய்விடுவான்.

சரவணனின் மனைவி அரசு வேலையில் இருப்பதால் காலையில் போகிறவர், இரவு தான் வீடு திரும்புவார்.

பெண் பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் அதீத அன்பும் கொண்ட அந்தப் பெண்மணி, குழந்தைகள் பள்ளி முடித்து வருவதற்குள் , கணவன் சரவணன் இடம் ஓராயிரம் முறை போன் செய்துட்டு இருப்பார்; கேட்டு இருப்பார்; அதற்கு மனைவி கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்வார் சரவணன் . குழந்தைகளை விட்டுவிட்டு எங்காவது ஒரு வழியே சென்றிருந்தார் என்றால் அவரால் போக வேண்டும் என்ற இடத்தில் சரியாக கவனத்தைச் செலுத்த முடியாது. எப்போது போக போக வேண்டும் என்ற நிலையிலேயே இருப்பார் சரவணன்.

வழக்கம் போல சரவணன் ஒன்றுக்கும் சரவணன் வந்ததும் படித்து அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி எதையோ பார்த்து பார்த்துக் கொண்டிருந்தாள் யுவந்திகா. அப்போது அன்று அவளின் அம்மாவிற்கு விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்தார். நீண்ட நேரமாக செல்போனில் மூழ்கிக் கிடந்த யுவந்திகாவை அதட்டினாள் அம்மா.

பனிரெண்டாவது படிக்கிற . பப்ளிக் எக்ஸாம் அத விட்டுட்டு இப்பிடி செல்பாேன் பாத்திட்டு இருந்தா எப்பிடி? இது தவறு என்று அம்மா திட்டிய பாேது அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாத யுவந்திகா.

அப்பா தான்மா பாக்கச் சாென்னாரு என்று பழியை சரவணன் மீது பாேட்டாள் யுவந்திகா

அப்படி அவள் சாெல்லிவிட்டு, அப்பா சரவணைப் பார்த்தாள். அவளின் கண்கள் இரண்டும் நீரால் நிறைந்து நின்றன.

அப்பா ஏதும் நம்மைக் காட்டிக் காெடுத்து விடுவாராே என்ற பயம் அவளுக்குள் நிறைந்து நின்றது. ஆனால் சரவணன் ஏதும் வாய் திறக்கவில்லை.

மாறாக சரவணனுக்கு மனைவியிடமிருந்து தாளிப்பு கிடைத்தது.

எல்லாம் நீங்க குடுக்கிற செல்லம். இது தப்பு. இனிமே செல்பாேன அவ கையில பாத்தா ஒங்களுக்கு தான் பூஜை என்று மனைவி அதட்டினாள். செய்யாத குற்றத்திற்கு அப்பாவை திட்டு வாங்கிக் குடுத்திட்டமே என்ற வருத்தம் யுவந்திகாவின் கண்ணில் தெரிந்தது.

இப்பாேதெல்லாம் சரவணனே செல்பாேனை யுவந்திகாவிடம் காெடுத்தாலும் அவள் வாங்குவதில்லை.

யுவந்திகா அப்பாவின் மகள்.

Leave a Reply

Your email address will not be published.