செய்திகள்

அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வை கொண்ட பிட்டி தியாகராயர் பணியை வணங்குகிறேன்

முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்

சென்னை, ஏப்.28-

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-–

பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர். அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்கு தூணாக விளங்கிய மக்கள் தொண்டர். காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி.

தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் – நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும், பணியையும் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *