செய்திகள்

அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் சவால் சிகிச்சையில் 201 முதியவர் உயிர் பிழைத்து வீடு திரும்பினர்

அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் சவால் சிகிச்சையில் 

201 முதியவர் உயிர் பிழைத்து வீடு திரும்பினர்:

துணை சேர்மன் பிரீதா ரெட்டி தகவல்

 

சென்னை, மே. 8–

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய், சவால் சிகிச்சையில் 201 முதியவர்கள் உயிர் பிழைத்து வீடு திரும்பினர்.

50 படுக்கைகளுடன் தயார் நிலையில் சிகிச்சைக்கு மருத்துவர் உள்ளனர். ஒரு நோயாளிக்கு ஒரு நர்ஸ் வீதம் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து வெற்றி கண்டுள்ளதாக இதன் துணை சேர்மன் பிரீதா ரெட்டி தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எனக்கு இருக்குமோ? என பயத்துடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதே பெரிய சவாலாக உள்ளது என்றார் அவர்.

கொரோனா வைரஸ் நோயாளி சிகிச்சைக்கு தனி பிரிவு நிறுவப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ‘அப்பல்லோ கவசம்’ பாதுகாப்பு திட்டத்தை இதன் மருத்துவமனைகளில் முழுவதுமாக அமல்படுத்தி உள்ளது. இதர நோயாளிகள், நர்ஸ், ஊழியருக்கு நோய் தொற்று ஏற்பட்டாமல் இருக்க முழுமையாக சுத்தமான சுகாதாரத் திட்டத்தை அப்பல்லோ வெற்றிகரமாக அமல் படுத்தியுள்ளது. எந்த பிரச்சினையுடன் நோயாளி வந்தாலும், இந்த மருத்துவமனைக்கு எப்போதும் ‘லாக் அவுட்’ கிடையாது.

அப்பல்லோ மருத்துவமனைகளில் மொத்தம் 620 தனிமைப்படுத்தபட்ட படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிக்கு சிகிச்கை அளிக்கப்படுகிறது என்றார்.

சென்னையில் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் இதுவரை 201 நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்கை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 90 வயது மூதாட்டி ஒருவரும், அவரது 60 வயது மகனும் அடங்குவர். இவர்கள் சிகிச்சை பெற்று, பூரண நலம் பெற்று வீடு திரும்பினர்.

பல முதியவர்கள் கொரோனா வைரஸ் அதிகபட்ச பாதிப்புடன் சிகிச்சைக்கு வந்தனர். சிலருக்கு வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவி சிகிச்சை தேவை இருந்தது. இவர்களும் அப்பல்லோ சிகிச்சையில் குணமடைந்தனர். இதற்கு தனிமைப்படுத்த வார்டாக ஒரு தளத்தை வானகரம் அப்பல்லோ மாற்றியது. இதில் ஐ.சி.யு. அவசர சிகிச்சை பிரிவு, தனி அறைகள், வசதியுடன் தயார் நிலையில் எப்போதும் 50 வார்டுகள் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்கனவே பரவிய ‘சார்ஸ்’ தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்திய சிசிக்சையில் கூடுதலாக சில பாதுகாப்பு வசதிகள் சேர்க்க வேண்டியது உள்ளது.

அப்பல்லோ இந்த வைரஸ் பாதித்த நோயாளி சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர், நர்ஸ்களுக்கு 6 பாதுகாப்பு கவச உடைகளை நாளொன்றுக்கு வழங்குகிறது. ஒரு நோயாளிக்கு ஒரு நர்ஸ் என சிறப்பு கவன சிகிச்சை அளித்து, சிகிச்சையில் அப்பல்லோ வெற்றி பெற்றுள்ளது என்றார் பிரீதா ரெட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *