டைரக்டர் ஹர்சத் ரெட்டி தகவல்
சென்னை, பிப்.5–
அப்பல்லோ கேன்சர் மருத்துவமனைகள் புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் உள்ளது. இந்தியா மட்டுமின்றி 147 நாடுகளின் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று டைரக்டர் ஹர்சத் ரெட்டி தெரிவித்தார்.
உலக புற்றுநோய் தினத்தையோட்டி தேசிய அளவிலான பரப்புரை திட்டத்தை அப்போலோ கேன்சர் மருத்துவமனைகள் முன்னெடுக்கிறது; இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்களது சங்கம் (AROI), தமிழ்நாடு அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் (TASO) மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல புற்றுநோயியல் மருத்துவ சங்கம் (TAMPOS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடு இப்பரப்புரை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
தேனாம்பேட்டை– அப்போலோ கேன்சர் சென்டரின் மருத்துவ புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். சங்கர் சீனிவாசன் நெறிப்படுத்தி வழங்கிய இக்குழு விவாதத்தில் AROI, TAMPOS, TASO அமைப்புகளின் பிரதிநிதிகளும், அப்போலோ கேன்சர் சென்டர் – வானகரம் – ன் மருத்துவ புற்றுநோயியல் துறைத்தலைவர் டாக்டர். எஸ்.சுரேஷ், அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மருத்துவ புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். பிரசாத் ஈஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் 14 லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில் ஏற்படுவதாக அறியப்படுகிறது. 2025–ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையானது, 15.7 இலட்சமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத்துறைக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை அறிவிக்க வேண்டும் என்றார் ஹர்சத் ரெட்டி.
சிகிச்சை பராமரிப்பையும் மற்றும் அதன் மீதான ஆராய்ச்சியையும் பரவலாக்க இது பெரிதும் உதவும் என்று கூறினார்.
ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை உட்பட, 15 மாநிலங்கள், அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை ஏற்கனவே அறிவித்திருக்கின்ற நிலையில், தேசிய அளவில் இதனை அமல்படுத்துவது இன்னும் அவசியமாக இருக்கிறது.
அப்போலோ கேன்சர் மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர் கொண்டிருக்கிறது என்றார் ஹர்சத் ரெட்டி.
மேலும் விவரங்களுக்கு https:// apollocancercentres.com/ என்ற வலைதளம் பார்க்கலாம்.