செய்திகள் வாழ்வியல்

அபார அமெரிக்கா | ஆர்.முத்துக்குமார் (பாகம்-6)

ஆய்வில் சிறந்த சின்சினாட்டி பல்கலைக்கழகம்பண்டைய நாகரீகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டுமா? மருத்துவ மர்மங்களுக்கு விடை தேடுகிறீர்களா? உயர பறக்கவும், விரைந்து செல்லவும் புதிய வாகனத்தை உருவாக்க கனவு வருகிறதா? சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் அதற்கு எல்லா வசதியும் இருக்கிறது. சர்வதேச மாணவர்களை ஏற்றுக் கொள்ள தயாராகவும் இருக்கிறது.
மேல் படிப்பிற்கு வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம், குறிப்பாக அமெரிக்கா நோக்கி படையெடுக்க காரணம் எண்ண?

நம் நாட்டிலில்லாத பாட பிரிவுகள், குறிப்பாக உயர் தொழில்நூட்ப கல்வி அமெரிக்காவில் தான் உண்டு என நம்பினார்கள், அது நிச்சயம் உன்மை தான்.

எல்லா விஞ்ஞான பிரிவுகளிலும் அமெரிக்காவில் உயர் படிப்பு வசதியிருப்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

அமெரிக்கா மிகப் பெரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால் ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் சிறப்பு இருக்கிறது. வடக்குப் பகுதியில் ஆர்டிக் பனிப்பிரதேசத்தின் அருகாமையில் இருப்பதால் கடும் குளிர் நிலவுகிறது. மீதப் பகுதிகளில் பாலைவனம் முதல் மலைப்பிரதேசங்கள், கடற்கரை சார்ந்த பகுதிகளும், அடர்த்தியான காடுகளும் உண்டு!

அவர்களது நிலப்பிரதேசம் நீண்டு, பரந்து இருப்பதால் தாங்கள் தனி உலகம், நமக்கு நாமே எதையும் உருவாக்கி அதை அனுபவிக்கவும் வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருக்கிறார்கள்.

அதனால் ஒவ்வொரு பகுதியில் அங்கு மிக தேவையான தொழில்நுட்பம் உருவாகிட வழி காண்கின்றனர்.

மலைப்பகுதிகளில் விண் ஆய்வுகள், நிலப்பரப்பு பகுதிகள் ஐடி வளர்ச்சிகள், கடற்கரை பிரதேசங்களில் கடல் சார் தொழில் நுட்பங்கள், மையப் பகுதிகளில் வான்வெளி ஆராயச்சிகள், வாகன ஆய்வுகள் என எல்லா பகுதிகளிலும் ஏதேனும் சிறப்பு உருவாகியுள்ளது!

நமது விஞ்ஞான அறிவு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது, அமெரிக்க கண்டுபிடிப்புகளோ கடந்த 300 ஆண்டுகளையும் விட குறைவானது என்று நாம் நிச்சயம் கூறி பெருமைப்படலாம்.

ஆனால் நமது மாணவர்களின் ஆய்வு திறனும், பணியாற்றும் வேகமும், சிக்கல்களை தீர்க்கும் திறனும் அங்கு சங்கமித்தவுடன் விஞ்ஞான வளர்ச்சிகள் உலகையே வியக்க வைத்து வருகிறது, நாமும் அதைப்பார்த்து வியந்தும் வருகிறோம்!

நாசா அமைப்பு விண்வெளி ஆராய்ச்சியில் முன் நிற்கிறது, இந்தியாவின் அர்த்தசாஸ்திரத்தில் உயர்வாக ஒரு காலத்தில் இருந்ததுடன், இன்றும் நாம் எவருக்கும் பின் தங்கவில்லை.

ஆனால் நாசா விஞ்ஞானிகள் விண்வெளி பயணங்களுக்கு இருந்த இடர்பாடுகளை சமாளிக்க பலவித கருவிகளை வடிவமைத்து வருகிறார்கள், அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், நிச்சயம் பால்பாயின்ட் பேனாவை சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்!

விண்ணில் பயணிக்கும் போது குறைந்த அல்லது அறவேயில்லாத புவியீர்ப்பு விசை இருக்கும் போது பண்டைய ‘பவுண்டன்’ இங்க் பேனாவால் எழுத முடியாத சிக்கலை தீர்க்கவே எந்நிலையிலும் சீராக எழுத உருவானது தான் பால்பாயிண்ட் பேனா!

பால்பாயிண்ட் பேனா கடந்த 40 ஆண்டுகளில் உலகெங்கும் உபயோகமாகும் ஒரு அன்றாட உபயோக கருவியாக வந்து விட்டது!

அது போன்றே ரஷிய விண்வெளி ஆராயச்சியாளர்கள் விண்ணில் பறக்கும் போது உலக உருண்டை மிக சிறியதாக கிட்டதட்ட ஒரு புள்ளியாக தெரியும் போது குறிப்பிட் இடத்தில் உள்ள ஒரு தொலை தொடர்ப்பு கருவியை தொடர்பு ஏற்படுத்த உருவானது தான் ஜிபிஎஸ் (GPS) தொலை தொடர்பு, முதன் முதலில் விண்ணில் பறந்து வெற்றியுடன் தரையிறங்கிய முதல் விண்வெளி வீரரான —- உலகை படுவேகமாக சுற்றிக் கொண்டிருந்த களத்தில் இருந்து வீட்டில் இருந்தவர்களை தூல்லியமாக தொடர்ப்பு கொண்டு பேச உபயோகித்த தொழில்நுட்பத்தை தான் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் செல்போன் ஆதித்கதிற்கு உதவிய தொழில்நுட்பமாகும்!

ஆம், நம்மிடம் பண்டை காலத்தில் இருந்த அறிவியலை தகவல் களஞ்சியமாக அதாவது data base ஆக சேமிக்காது விட்டு விட்டதால், பிற்கால ஆய்வாளர்கள் அத்தகைய தொழில்நுட்பங்களை அன்றாட உபயோக கருவியாக உருவாகாமல் விட்டு விட்டனரோ? என்ற கேள்வி எழுகிறது.

இந்த விவாதத்தை பயண கட்டுரை படிக்கும் உங்கள் முன் வைக்க காரணம் உண்டு.

சின்சினாட்டி மாநில பல்கலைகழக வளாகத்தில் நுழைந்த சிறிது நேரத்தில் முதலில் நுழைந்த கட்டிடத்தின் வரவேற்பு பகுதியில் ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பு பலகை இருந்தது, அதில் நீல் ஆம்ஸ்டிராங் பிறப்பு ….. இறப்பு …… தேதிகளுடன் அவர் சந்திரனில் நடத்திய அதிமுக்கிய அண்டசராச வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தையும், ஆய்வுகளையும் அம்மண்ணில் நடந்த சாதனையையும் குறிப்பிட்டு விட்டு, பின்னர் நாசாவில் இருந்து ஓய்வு பெற்றவுடன் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞான படிப்புத் துறையின் கவுரவு ஆசிரியராக நியமிக்கப்பட்டு, அவரது முதிர்ந்த வயது வரை இதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, பல மாணவர்களுக்கு தன் அனுபவ பாடத்தை சொல்லித் தந்து பாடம் நடத்தியிருக்கிறார்!

அதாவது அவர் காலத்திலேயே தனது வாழ்க்கையையும், அறிவியல் ஞானத்தையும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் உதவிட் வழியை கண்டுள்ளனர். மேலும் இறுதி வரை அந்த சாதனையாளர் கவுரவமாக வாழ வழிவகையும் செய்துள்ளனர்.

இப்படியாக பல சாதனையாளர்களையும், நிபுணர்களையும், அறிவு ஜீவிகளையும் அடுத்த தலைமுறை உருவாக பயன்படுத்துவது அமெரிக்க பல்கலைக்கழக பாடதிட்டத்தில் இருப்பதால் ஒவ்வொரு ஆய்வின் வளர்ச்சியும், அடுத்த தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டே இருக்க முடிகிறது, உருவாகிட களம் செழிப்பாகவே இருக்கிறது!

சின்சினாட்டி பல்கலைகழகத்தின் நிபுணர்கள் இருப்பதுபோல், பள்ளிகளில், பொது நூலகங்களில், நகர வடிவமைப்பு மற்றும் வளர்ச்சிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் எல்லாம் ஆலோசனைகள் தர அனுபவம் பெற்ற நிபுணர்களின் ஆலோசனைகளை வேண்டி விரும்பி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி ஒரு முயற்ச்சியின் பயனாக சமுதாயத்தின் எல்லா தரப்பிலும் புதுமையும், உரிய நவீனமும், பாதுகாப்பான சிறந்த வழிகாட்டுதலுடன் பின்னிபிணைந்து மக்களுக்கு சிக்கலில்லாத, சிறப்பான சொகுசு வாழ்க்கையை உருவாக்கி விட்டனர், என்றே பாராட்ட தோன்றுகிறது.

இதற்கு அத்தாட்சி நான் உங்களுக்கு எழுதிக் கொண்டு இருக்கும் இப்பயண கட்டுரைக்கு உதவும் பால்பாயிண்ட் பேனா!

அது சரி, சின்சினாட்டி பல்கலைக்கழக அனுபவம் எப்படி என கேட்கிறீர்களா? இன்றைய காலகட்டத்தில் மாலுக்குச் சென்றால் ஷாப்பிங் மட்டுமா செய்கிறோம்! எல்லா வித கேளிக்கை கும்மாளத்தையும் அனுபவிக்கிறோம், ரசித்து சாப்பிட விதவிதமன உணவு ரகங்களையும் அனுபவிக்கிறோம், ஏ.சி.யின் பயனமாக குளுகுளு வசதியுடன் சுவாசிக்க சிறந்த காற்று மண்டலமும் இருப்பதால் உடல் ஆரோக்கிய நடைபயிற்சிக்கு ஏற்ற இடம்!

நாங்கள் சுற்றிப் பார்த்த சின்சினாட்டி பல்கலைக்கழகம் ஆடம்பரமான அழகழகான கட்டிடங்களும், பரந்து விரிந்துள்ள பசுமை தோட்டங்களும் இருந்தது.

அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இருந்து, உலகெங்கும் 114 நாடுகளில் இருந்தும் ஆண்டுக்ளு 50 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியேறுகிறார்கள்.

பொறியியல், மருத்துவம், நுண்கலை, கலை, பண்பாடு, நர்சிங், கட்டிட கலை, நிர்வாகவியல் என அனைத்துப் படிப்புகளும் இங்கே உண்டு.

உயர்படிப்பு முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை அனைவருக்கும் தேவையான நவீன பயிற்சி வகுப்புகள், ஆய்வுக் கூடங்களும் கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் இருப்பதால் அவர்களுக்கு உணவகம் நமது மால்களில் இருப்பதை விட அதிகமாகவே இருப்பதுடன், அனைத்து உணவு பிரியர்களுக்கும் ஏற்ற உணவகங்கள் உள்ளது.

ஒரு பெரிய திரையங்கும் கூட இருக்கிறது! இங்கு சினிமா படங்களுடன், மாணவர்களின் கருத்தரங்குகளும் தினமும் நடத்தப்படுகிறது.

எப்போதும் படிப்பு தானா? என்றால் அதுவும்மில்லை, அங்கு மூன்று அடுக்கு மாடி உள்விளையாட்டு அரங்கம் உள்ளது, கிட்ட தட்ட 100 மீட்டர் சுற்றி ஓடும் ஓடுதளமும், மறுபக்கம் 50 ஜிம் உபகரணங்கள், குறிப்பாக ஓட வசதியான டிரெட்மில், சைக்கிளிங் டிரெட்மில், படகு ஓட்டுவது போன்ற டிரெட்மில் என விதவிதமான டிரெட்மில்கள் சுமார் 60 க்கும் மேற்பட்டது அங்கே பளபள என நம் கண்களில் பட ‘வாங்க, ஓட்டிப் பாருங்க, எல்லாம் இலவசம் தான்’ என்று பார்ப்பவரை சுண்டி இழுக்கிறது!

ஆம், இவையெல்லாம் இரண்டாவது தளத்தில் இருக்கிறது.

முதல் தளத்தில் பல்வேறு ஜிம் சாதனங்களும், யோகா பயிற்சி வசதியும் இருக்கிறது. தரைதளத்தில் கிட்டத்தட்ட ஆறு கூடைப் பந்து ஆட்ட களங்கள் உள்ளது, இங்கே இறகு பந்து, வாலிபால் எல்லாம் விளையாட முடியும்.

மேலும் தரை தளத்திற்கும் கீழே பேஸ்மெண்டில் அழகான வடிவத்தில் இருக்கும் ‘வெது வெதுவென’ சூடாக இருக்கும் நீச்சல் குளமும் இருக்கிறது. இங்கு ஒரு பக்கம் டைவிங் போர்ட்டும், மறுபுறம் சிறுவர்களுக்கான பிரத்தியோக நீச்சல் குளமும் இருக்கிறது.

வெளியே ஒரு பெரிய உணவகமும் உண்டு, இங்கு உள்ள உணவு ரகங்கள் காய்கறி சாலட், பழ சாலட்டுகள், சத்தான பழ ரசங்கள் மற்றும் சுடச்சுட காபியும் டீயும் கூட கிடைக்கிறது.

ஆக உடற்பயிற்சிக்கும் பிறகு எண்ணை பிசுக்காய் உணவு கிடையாது, ஆரோக்கியமான சத்தான உணவு மட்டுமே அந்த பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட முடியும்!

* * *

மேற் படிப்பிற்கு சின்சினாட்டி 

மேல் படிப்பிற்கு சின்சினாட்டி பல்கலைக்கழகம் சென்ற எங்கள் மாப்பிள்ளை அபிஷேக் திருமணத்திற்குப் பிறகு தான் கைபிடித்த பிரியதர்ஷினியை சும்மா வீட்டில் அடங்கி இருந்து விடாதே, மேலே படி என உறுதியாய் இருந்து ஒரு வருட M.Eng படிப்பை ரசாயன பிரிவில் சேர்த்து விட்டார்.

பி.டெக் கெமிக்கல் பொறியாளர் படிப்பு முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் சென்னையில் பணியாற்றிய பிறகு திருமண நேரத்தில் வேலையை ராஜினாமா செய்த நாளில் மிகவும் சோகமாகவே இருந்தாள். பெற்றோர்களாகிய நாங்கள் இருவருமே மனம் வாடினோம் என்றாலும், திருமண பரபரப்பில் மூழ்கிட அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணியில் மூழ்கினோம்.

இன்றோ சின்சினாட்டி பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப் பார்க்கும்போது ‘அட நமது மகள் பிரியா நிச்சயம் பெரும் அதிர்ஷ்டசாலி தான். இத்தகைய வளாகத்தில் உயர்படிப்பா? என நிறைவான மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்த்தோம்.

மேல்படிப்பை முடித்த சில நாட்களில் பணி முன் அனுபவமும், ஓரளவு நல்ல மதிப்பெண்ணும் பெற்றிருந்ததால், உடனே சின்சினாட்டியிலேயே பணியும் கிடைத்துவிட்டது, ஆனால் நிரந்தர விசா எப்போது? என்பதே அவள் மனதில் குறுகுறுக்கும் கசப்பான உண்மை!

எங்கள் மருமகன் அபிஷேக்கும் அதே நேரத்தில் தான் டாக்டர் பட்டத்தையும் மெக்கானிக்கல் பிரிவில் ரோபோடிக் விஞ்ஞானத்தில் வெற்றிகரமாக முடித்து விட்டார்.

பாடம் சொல்லித் தருவதில் அவருக்கு அலாதி ஆனந்தம் என்பதால் ஆசிரியப் பணிகளுக்கு விண்ணப்பித்து வருகிறார். தற்போது சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் சார்பு பாலிடெக்னிக் வளாகத்தில் ஆசிரியப் பணியில் தற்காலிக வேலையில் இருக்கிறார். டாக்டர் படிப்பு முடித்த அவருக்கு வேறு அமெரிக்க மாநிலங்களில் விரைவில் பணி கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருப்பது புரிகிறது, ஆனால் அவரது ஆசையோ சின்சினாட்டியில் பணி கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்பது தான், காரணம் அந்நகரின் சௌகரியங்கள்.

(தொடர்ச்சி நாளை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *