செய்திகள்

அபராதம் இல்லாமல் மின்சார கட்டணம் செலுத்த 18-ந்தேதி வரை காலநீட்டிப்பு

சென்னை, டிச.7-–

அபராத தொகை இல்லாமல் மின்சார கட்டணம் செலுத்த வருகிற 18-ந்தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இதுகுறித்து நிதி, மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

`மிக்ஜாம்’ புயலால் கடந்த 3 நாட்களாக மின்சார கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்சார நுகர்வோர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, மின் நுகர்வோர்கள் தங்களது மின்சார கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மின்சார உபயோகிப் பாளர்களின், மின்சார கட்டணம் செலுத்தும் கடைசி நாள் கடந்த 4-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை இருந்த நிலையில், தற்போதைய சூழலின் காரணமாக அபராத தொகை இல்லாமல் வருகிற 18-ந்தேதிவரை மின்சார உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மின்சார உபயோகிப்பாளர்கள் மின் கட்டணத்துடன் கடந்த 4-ந்தேதி முதல் நேற்று (புதன்கிழமை) வரை அபராத தொகை செலுத்தி இருந்தால், அந்த அபராத தொகை அடுத்து வரும் மாத மின்சார கட்டண தொகையில் சரிக்கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *