லண்டன், பிப். 11–
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது புற்றுநோயைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அதில் இருந்து குணமடைய வேண்டும் எனக்கூறிய நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், 75,. இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்த பரிசோதனையில் அவருக்கு, ‘ப்ராஸ்டேட்’ வீக்கம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த பரிசோதனைகளில், சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.மிகப்பெரிய ஆறுதல் இதையடுத்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் மன்னர் சார்லஸ் விரைவாக குணமடைய வேண்டும் என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், மூன்றாம் சார்லஸ், நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர், ” புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும், இதுபோன்ற அன்பான எண்ணங்கள் மிகப்பெரிய ஆறுதல் மற்றும் ஊக்கம் தரும்” எனக் கூறியுள்ளார்.