செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் மாணவிகளின் நாட்டுப்புற கலை நடனத்துடன் பொங்கல் விழா

சென்னை, ஜன. 12–

சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமை உரையை கல்லூரியின் நிறுவனர் எஸ்.தேவராஜ் நிகழ்த்தினார். கல்லூரியின் துணை நிறுவனர் டெல்பின் தேவராஜ், கல்லூரியின் செயலர் தேவ் ஆனந்த், இயக்குனர் ஜானி கிறிஸ்டோபர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் நாட்டுப்புறப் பாடல், நடனம் ஆகிய நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து கோணிப்பை ஓட்டம், கயிறு இழுத்தல், தாயக்கட்டை, பரமபதம், பல்லாங்குழி, கல்லாங்கல், லெமன் அண்டு ஸ்பூன், காளை மாடு அடக்குதல், இராட்டினம், பானை செய்தல், உறியடி, கோலப்போட்டி போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றது.

பொங்கல் விழாவில் குலுக்கல் நடைபெற்றது. குலுக்கல் பரிசாக மாணவியர்களுக்கு தங்க நாணயத்தை கல்லூரியின் நிறுவனர் தேவராஜ் பரிசாக வழங்கினார்.

அன்னை வேளாங்கண்ணி வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து விற்பனை சந்தைகளை உருவாக்கினர். கல்லூரியின் முதல்வர் அனிதா ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.

இவ்விழாவில் மாணவியரும் அன்னை வேளாங்கண்ணி குழுமத்தினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *