வாழ்வியல்

அன்னை தெரசா

(இன்று அன்னை தெரசா பிறந்த நாள்)
அல்பேனியா நாட்டில் ஆகஸ்ட் மாதம்
இருபத்தாறில் பிறந்தவர்! அவர்
இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா ! அவரே
அரிய சேவையால் அன்னை தெரசா ஆனார்!!
*
மறைப் பணியாளரின் பாதுகாவலர் – அங்கு
லிசியே நகரில் வாழ்ந்து வந்த
ஆக்னஸ் கோன்ஜாத் தேர்வு செய்தார்! பின் அவர்
தெரசா எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டார்!!
*
ஏழை எளியோருக்கு உதவியவர்! என்றும்
நோயாளிகளை அன்போடு அரவணைத்தவர்!
மதங்கள் கடந்த மாதவச் செல்வி! அவர்
ஆர்வம் மிக்கச் சமூகக் காவலர்!!
*
ஆதரவற்றோருக்கு பரிந்து பேசியவர்! அவர்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்!!
அன்பின் பணியாளர் சபை நிறுவியவர்! அவர்
பாரத ரத்னா விருது பெற்றவர்!!
*
நலவாழ்வு மையங்கள் உருவாக்கியவர்! அதில்
இலவசமாய் உணவும் மருந்தும் வழங்கியவர்!!
இறந்தபின் அருட் தந்தைச் சின்னப்பரால் கல்கத்தா
அருளாளர் தெரசா எனப் புகழப்பட்டவர்!!
*
நூற்றி இருபத்திமூன்று நாடுகளில் – இவர்
அறுநூற்றிப்பத்து சேவை மையம் நடத்துகிறார்!
அன்னை தெரசா சமூகசேவை வளர்க!
நம் அன்னை தெரசாவின் புகழ் வாழ்க!!
***

கவிஞர் எஸ்.ராமகிருஷ்ணன்
(சிறுமுகை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *