சிறுகதை

அன்னதானம் – ராஜா செல்லமுத்து

எவ்வளவோ முயன்று பார்த்தும் குபேரன் கோவிலுக்கு போவது ராஜேஷுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது.

இதற்கும் அவன் வீடு இருக்கும் தூரமும் கோயில் இருக்கும் தூரம் அருகருகே.

ஆனால் கோவிலில் போய் தரிசனம் செய்வதற்கு தான் அவனுக்கு நேரம் வாய்க்கவில்லை. பாக்கியம் இல்லை என்று சொல்வதைவிட கடவுள் அவனுக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் தினமும் குபேரன் மந்திரத்தை ஓத அவனோ தவறுவதில்லை.

அப்படியிருந்தும் அந்த இறைவன் அந்த சன்னதியில் அவனை நுழையவிடாமல் வைத்திருப்பது என்னவோ கடவுளுக்குத்தான் வெளிச்சம் .

இப்படி காலங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒருவர் குபேரன் கோயிலுக்கு போகலாம் என்று விண்ணப்பம் செய்தார்.

அந்தப் பெரியவரை அடுத்து ராஜேஷ் முருகேசன் முத்து மூவரும் அந்த பெரியவருடன் பயணப் பட்டார்கள் .

விரிந்து பரந்த குபேரன் கோயில் குபேர லட்சுமி தொடர்ந்து இருந்தது. அந்த கோவிலில் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்தவர்கள் யார் கோடீஸ்வரர்களாக தான் இருக்கிறார்கள்? இடையே யாருக்கும் குறையவில்லை என்று அந்தக் கோயிலைக் கட்டிய மேல்சாந்தி சொன்னார்.

மூவருக்கும் பெயர் ராசி அத்தனையும் பார்த்துவிட்டு கோயில் பிரகாரத்தில் ஆரம்பித்து கற்பகிரகம் வரை தனி கடவுளையும் தரிசிக்க வைத்தார்.

அதைவிட முக்கியம் ஒவ்வொரு சாமியின் வரலாறு , வைரம் தங்கம் பதித்த கிரீடங்கள் கிடகின்றன யார் யார் செய்து கொடுத்தார்கள்? என்பதையும் விலாவாரியாகச் சொல்லி கொடுத்தார்.

சொல்லிக்கொண்டு வந்தவர், அதுமட்டுமல்லாமல் வந்தவர்கள் கையிலேயே தட்டைக்கொடுத்து அவர்களாகவே கோவிலுக்கு ஒவ்வொரு சாமிகளுக்கும் பூஜை செய்ய அனுமதி அளித்தார் .

இதைப் பார்த்த அங்கிருந்த அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு அது விசேஷமாகப் பட்டது .அவ்வளவு மரியாதை செய்தார் மேல்சாந்தி.

ராஜேஷ் முருகேசன் முத்து மூவருக்கும் பெத்த சந்தோசம் இதுவரையில் இப்படி ஒரு தரிசனத்தை செய்ததில்லை என்று மூன்று பேரும் புளகாங்கிதம் அடைந்தார்கள் .

மூலக் கடவுளை வேண்டி விட்டு அதில் இருந்து சிறிது தூரம் சென்றபோது அரைக்காசு அம்மன் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். 108 அம்மன் அரைக்காசு அம்மன் அங்கு வீற்றிருந்தது , அத்தனை பேருக்கும் எவ்வாறு இருந்தது அதன் வரலாறுகளை சொன்ன மேல்சாந்தி நீங்கள் விருப்பப்பட்டால் அன்னதானம் வழங்கலாம். ஒரு நபருக்கு 50 ரூபாய் தான் என்று சொன்னார்.

அப்படி என்றால் நாங்கள் நூறு பேருக்கு அன்னதானம் செய்கிறோம் என்றார் முருகேசன்.

உடனே ராஜேஷ் தன்னுடைய கூகுள் பேயிலிருந்து ஐயாயிரத்தில் ஒரு ரூபாயை அரைக்காசு அம்மன் சன்னதிகள் அன்னதானத்திற்காக வழங்கினார்.

சாமி தரிசனம் முடித்து புறப்படும்போது மூவருக்கும் அங்கே உணவு காத்துக்கொண்டிருந்தது .

இல்ல வேண்டாம் என்று அவர்கள் சொன்னாலும் இறைவன் சன்னதியில் வழங்கப்படும் உணவை நிராகரிக்கக் கூடாது என்று அவர்களின் உள் மனசு சொல்லியது .

அந்த பெரியவர் உட்பட மூவரும் அங்கே உணவருந்தினார்கள்

முத்துவிற்கு சட்டென்று உறைத்தது ராஜேஷின் காதுகளில் போய் சாென்னான்.

ராஜேஷ் இதுதான் இறைவன். இறைவன் சன்னதியில் அன்னதானத்திற்கு பணத்தை கொடுத்தீர்கள்.ஆனால் அந்த இறைவன் நீங்கள் அன்னதானம் செய்வதற்கு முன்பாகவே நமக்கு உணவு அளித்து விட்டான். என்ன ஒரு வியப்பு .இறைவன் உணவை சாப்பிட்ட பிறகுதான் நாம் கொடுத்த உணவு மற்றவர்களுக்கு போய் சேரப் போகிறது.

இதுதான் கடவுள் என்று முத்து சொல்ல

ராஜேஷ் முத்து சொன்னது அத்தனையும் உண்மை என்று மட்டும் அந்த அரைக்காசு அம்மனை அன்னதானத்தை சாப்பிட்டு விட்டு வெளியேறினார்கள் .

அவர்கள் அளித்த அன்பளிப்புத் தொகையில் நடக்கவிருக்கும் அன்னதானம் இன்னும் ஓரிரு நாட்களில் நிகழும்..

அதற்கு முன்னால் பணம் வழங்கியவர்களுக்கு அரைக்காசு அம்மன் அன்னதானம் அளித்தது தான் வியப்பு.

Leave a Reply

Your email address will not be published.