செய்திகள்

அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும்: மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா, டிச. 29–

அனைத்து மதங்களும் அன்பையும் கருணையையும்தான் போதிக்கிறது என்பதால், தேர்தலுக்காக அல்லாமல், அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று மம்தா வலியுறுத்தினார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நேற்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஷக்லா நகரில் உள்ள பாபா லோக்நாத் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர், “நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். உலகில் எந்த மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை. அனைத்து மதங்களும் கருணையுடன் இருப்பதற்கும் அன்பையும் சகோதரத்துவத்தையும் பரப்புவதையும் கற்பிக்கின்றன.

இந்தியா கூட்டணி வெல்லும்

தேர்தல் நெருங்கும்போது மட்டும் மதங்களை மதிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தேர்தல் காலத்தில் மதங்களை வைத்து அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து, தேகங்கா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற தேர்தலில், மேற்கு வங்கத்தில், பா.ஜ.க.வுக்கு எதிரான போரில், திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும். அதே நேரத்தில், அகில இந்திய அளவில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று மம்தா கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *