சென்னை ஜன 23 –
மத்திய அரசின் ஊழியர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் சர்வதேச மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதை மத்திய ஊழியர் மற்றும் வேலை வாய்ப்பு இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா துவக்கி வைத்தார்.
அமைச்சகத்தின் செயலாளர் சுனிதா தார்வா பேசுகையில் 65% இந்திய மக்கள் 35 வயதுக்கு கீழாக உள்ளனர். இவர்களுக்கு இஎஸ்ஐசி மருத்துவ காப்பீடு மற்றும் இபிஎப் போன்ற வசதிகள் பாதுகாப்பு அளிக்கிறது. இதற்கு மோடி வழிவகை செய்துள்ளார் என்றார்.
இந்த மாநாட்டில் மத்திய ஊழியர் மற்றும் வேலை வாய்ப்பு துறை இணை அமைச்சர் சுஸ்ரீ சோபா க மற்றும் இந்த துறை செயலாளர் சுமிதா தார்வா, இந்த அமைப்பின் சர்வதேச தலைவர் முகமது அஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மன் சுக் மாண்டவியா பேசியதாவது:–
‘‘பாமர தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் சுய வேலைவாய்ப்பு செய்யும் ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்தியாவில் 60 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருத்துவ பாதுகாப்பு மற்றும் மருத்துவ இன்சூரன்ஸ் வசதிகளை 24 ஆயிரம் மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக பாதுகாப்பாக 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருளான அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதனுடைய புதிய இ போர்ட்டல் மேலும் 30 கோடி கூலி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க பதிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 24.8 கோடி மக்கள் இந்த சமூக பாதுகாப்பு வசதிகள் மூலம் பலன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அரசின் ஊழியர் மற்றும் வேலை வாய்ப்பு இணை அமைச்சர் சுஸ்ரீ சோபா பேசுகையில், இந்த மாநாடு மூலம் அரசின் உறுதியான பாமர மக்கள் வேலை வாய்ப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்கிறது என்றார்.