செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி

சேலம் முத்துசுப்பிரமணிய குருக்கள் மனு தள்ளுபடி

டெல்லி, ஆக. 22–

ஆகமவிதிகளை கற்றுத் தேர்ச்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சேலம் சுகவனேஸ்வர் கோயில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து, அந்த கோயிலின் அர்ச்சகரான முத்துசுப்பிரமணிய குருக்கள் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்தை உறுதி செய்து, தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் முத்துசுப்பிரமணி குருக்கள் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முத்து சுப்பிரமணிய குருக்களின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை என்று தீர்ப்பளித்தது.

அர்ச்சகராக தடையில்லை

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சேலம் சுகவனேஸ்வர காேயில் அர்ச்சகர் முத்துசுப்பிரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கோயில் ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்த யாரும், எந்த சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய எந்த தடையும் இல்லை என்று கூறினர். மேலும் முத்துசுப்பிரமணிய குருக்களின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *