செய்திகள்

அனைத்து இந்திய மொழிகளுடனும் இந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளது

Makkal Kural Official

அமித்ஷா கருத்து

புதுடெல்லி, செப். 14–

அனைத்து இந்திய மொழிகளுடனும் இந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 4வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ மொழித் துறை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைர விழாவை முன்னிட்டு அஞ்சல் தலையையும், நாணயத்தையும் அமித்ஷா வெளியிடுகிறார். ராஜ்பாஷா கவுரவ், ராஜ்பாஷா கீர்த்தி விருதுகளையும் அவர் வழங்குகிறார்.

இதற்கிடையே இந்தி அலுவல் மொழி தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள். அனைத்து இந்திய மொழிகளும் நமது பெருமை மற்றும் நமது பாரம்பரியம். அவற்றை வளப்படுத்தாமல் நாம் முன்னேற முடியாது. அலுவல் மொழி இந்தி ஒவ்வொரு இந்திய மொழியுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, இந்தி மொழி நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *