நல்வாழ்வு சிந்தனைகள்
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவை(ரத்தசோகை) பீட்ரூட்டில் உள்ள குணநலன்கள் தடுக்கிறது. உடல் சோர்வு, கவனமின்மை, எதிலும் ஆர்வமின்மை போன்றவைகளுக்கு வழிவகுக்கும் அனீமியாவை விரட்ட பீட்ரூட்டை அன்றாடம் எடுத்துக்கொள்ளும் போது இரத்தசோகையிலிருந்து மிக விரைவாக குணமடையலாம்.
பீட்ரூட் ஜூஸ்ஸில் கீரைகளை விட அதிக இரும்புச்சத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது . அதுமட்டுமின்றி பீட்ரூட்டில் உள்ள ஃபோலேட் எனும் பொருள் இரத்த சோகை சிகிச்சையிலும் உதவக்கூடும் .செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பீட்ரூட் சிறந்த நிவாரணி. உணவு உண்ணும் போது அரை டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். இதுமட்டுமா? மலச்சிக்கல் போன்றவைகளுக்கு சிக்கலே இல்லாமல் சுமூகமாக தீர்வை காண ரோமானியர்கள் பீட்ரூட் ஜூஸ் பயன்படுத்தினர் என கூறப்படுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன