சிறுகதை

அந்த வடை கிறக்கம் – மு.வெ.சம்பத்

Makkal Kural Official

நந்தன் மற்றும் அவர் மனைவி பெரிய நாயகி இருவரும் தங்களது பையனுக்கு பெண் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

சில உறவினர்கள் வருகைக்காக காத்திருந்தார்கள். வாசலில் வாகனம் வரும் சப்தம் கேட்டு நந்தன் வாசலுக்கு விரைந்து சென்றார். வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்தார். பெரிய நாயகி வந்தவர்களுக்கு சூடாக பானம் தந்து விட்டு போகலாமா என்றார். வந்தவர்களில் ஒருவர் அங்கு நாமெல்லாரும் பேச வேண்டாம். ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் நந்தனிடம் சொல்லி விடுவோம் என்றார். நந்தன் பையன் சண்முகத்திற்குப் பிடித்தால் மட்டுமே மேற் கொண்டு பேசலாம் என்றார். நந்தன் அதற்காக முகத்தை விரைப்பாக வைக்காமல் புன்னகை கலந்த முகமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

பெரிய நாயகி யாருக்கும் எதுவும் வேண்டாமே என்றதும் சரி கிளம்பலாம் என்றாள்.

சண்முகம் வாகனத்திற்கு ஏற்பாடு செய்ய முனைந்தார். அடுத்த பத்து நிமிடங்களில் வாகனம் வர எல்லோரும் புறப்பட்டார்கள். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் வாகனம் பெண் வீட்டை அடைந்தது. வந்தவர்களை பெண் வீட்டார் மகிழ்வுடன் வரவேற்றார்கள். வீட்டில் வந்து அமர்ந்த மாப்பிள்ளை வீட்டார் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போது வாசலில் ஒரு கார் வந்தது கண்டு பெண்ணின் தந்தை குமரன் காரிலிருந்து இறங்கிய தனது நண்பன் ரவியைக் கண்டு ஆனந்தமடைந்து வா வா ரவி என்றார்.

உள்ளே வந்த ரவி நந்தனைக் கண்டதும் என்ன நண்பா நலமா என்றான்.

நந்தன் பார்த்து எவ்வளவு நாளாச்சு என்றான்.

ரவி குமரனைப் பார்த்து இவர் என்னுடன் வேலை பார்த்தவர் ஒரே அலுவலகத்தில் என்றார்.

பின் நந்தனைப் பார்த்து குமரனும் நானும் ஒன்றாகவே கல்லூரி வரை படித்தோம் என்றார்.

சரி சரி நாமெல்லாம் ஒன்னுக்குள் ஒன்னாகி விட்டோம் என்றார்கள்.

ரவி தனது இருக்கையில் அமர்ந்ததும் குமரன் நந்தனிடம் கமலா எனக்கு ஒரே பெண். அவரை அவள் விரும்பியபடி படிக்க வைத்துள்ளேன். ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலை செய்கிறாள் என்றார்.

அவள் பெயர் ரத்னா என்றார். பெரியநாயகி கல்யாணத்திற்குப் பிறகு பெண் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றால் எங்களுக்கு சம்மதமே என்றார். இந்தக் காலத்தில் பெண்கள் தனது சொந்தக் காலில் நிற்பதையே விரும்புவார்கள் என்றார். அப்போது ரவி சண்முகா என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க, சண்முகம் ஞாபகம் இல்லாமலா என்றார். நீங்கள் சுற்றுலா கூட்டிச் சென்றீர்களே, அது இன்னும் என் நினைவில் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துள்ளது என்றார்.

ரவி ஒரு சிரிப்பை உதிர்த்து சண்முகத்தைத் தட்டிக் கொடுத்தார்.

இதற்கிடையில் குமரன் மனைவி சூடாக காபி கொண்டு வர, ரவி என்ன கோகிலா சௌகரியமா என்று கேட்டாள். அண்ணி நலமா என்றார் கோகிலா.

நந்தன் மனைவி சரி பெண்ணை வரச் சொல்லுங்கள் என்றார்.

அலங்கார யுவதியாக பெண் வந்தாள்.

வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணால் பேசிக் கொண்டனர். நந்தன் மற்றும் பெரியநாயகி சண்முகத்தைப் பார்க்க, அவர் சிறு புன்னகையை உதிர்த்தார்.

இதற்கிடையில் பெண் வீட்டார் வந்தவர்களுக்கு பாதுஷா மற்றும்அந்த வடையைத் தந்தார்கள். ரவி நந்தனிடம் உங்களுக்கு பிடித்த வடை மற்றும் சண்முகத்திற்கு பிடித்த பாதுஷா என்றார்.

சற்று நேர அமைதிக்குப் பின் குமரன் நந்தனை நோக்கிய வேளையில் சண்முகம் பிடித்துள்ளதென கூறினான்.

நந்தன் பெரியநாயகியிடம் எல்லாம் சரியாகவே செல்கிறது என்றார்.

பெரிய நாயகியும் சற்று புன்முறுவலுடன் ஆமாம் என்றார். ரவி மொத்தமாக எல்லாம் பிடித்துள்ளதா என்று கேட்க, பெண்ணிடம் சம்மதம் கேளுங்கள் என்றார் மாப்பிள்ளை சார்பில் வந்த ஒருவர்.

நந்தன் உடனே அது தான் சரி என்றார்.

பெண்ணிடமிருந்து நல்ல தகவல் வர, குமரன் என் பெண் கண் கலங்காமல் இருந்தால் நலம் என்றார்.

பெரியநாயகி நாங்கள் நன்றாகவே கவனித்துக் கொள்வோம், பயப்பட வேண்டாம் என்று கூறினாள்.

மீண்டும் பெண் வேலைக்குச் செல்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றார்.

குமரன் உங்கள் வீட்டிலிருந்து எங்கள் பெண் கம்பெனி அரை மணி நேர பயணம் தான் என்றார்.

நந்தன் ரவியை தனது வீட்டிற்கு அழைத்தார். அப்போது ரவி நான் தற்போது மதுரையில் உள்ளேன். இன்றே ஊருக்குக் கிளம்புவதால் அடுத்த தடவை கட்டாயம் வருகிறேன் என்றார்.

ரவி குமரனிடம் இந்த வடையை கல்யாணத்தில் போட்டு விடாதே என்றார். ஏனென்றால் அதன் மகிமை போயி விடும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நந்தன் குடும்பம் தான் அந்த வடைக்கு கிறக்கமானவர்கள் என்றார்.

சண்முகம் ரத்னா கல்யாணம் மிகவும் எளிமையான முறையில் சிறப்பாக நடந்தது.

நந்தன் விருப்பப்படியே நடந்தது. இரு குடும்பமும் அடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லையெனக் கூறலாம். நந்தன் வீட்டிற்கு வந்த ரத்னாவிற்கு நல்ல கவனிப்பே இருந்தது. பெரிய நாயகி ரத்னாவிடம் சமையல் தெரியுமா என்றார். ஓரளவிற்கு கற்றுக் கொண்டுள்ளேன் என்றார்.

சரி நான் சமையல் பண்ணுகிறேன். ஒத்தாசை பண்ணு. கற்றுக் கொள் என்றார்.

அதற்கு ரத்னா பெரிய நாயகியிடம் நான் பண்ணுகிறேன். இங்குள்ளவர்கள் சுவையை அப்போது தான்அறிய முடியும் என்றார் .

சரி எதாவது தேவை என்றால் தயங்காமல் கேளு என்றார் பெரியநாயகி.

சண்முகம் அடிக்கடி பயணம் மேற் கொள்வதால் ரத்னா தனிமையை பல நேரங்களில் உணர்ந்தார்.

பெரிய நாயகி ரத்னாவிடம் சண்முகம் இல்லாத நாட்களில் நீ விரும்பினால் உங்க வீட்டிற்கு சென்று வா என்றார்.

இது ரத்னாவிற்கு ஒரு நிம்மதியைத் தந்தது. சண்முகம் அன்று வந்ததும் ரத்னாவிடம் தங்களுக்குப் பிடித்த உணவான அந்த வடையை தயார் பண்ணச் சொல்ல ரத்னா எனக்குப் பண்ணத் தெரியாது என்றாள்.

சண்முகம் அவளிடம் ஏதும் சொல்லாமல் நகர்ந்தார்.

மாலை மூன்று மணியளவில் ரவி வாசலில் வருவதைக் கண்ட நந்தன் வேகமாக வாசலுக்குச் சென்று வரவேற்றார். எத்தனை நாளாச்சு நீ நம் இல்லம் வந்து என்றார்.

ரவி வர வர வீட்டில் வேலைஅதிகம் பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

இதுவே நான் இரவு 7 மணிக்கு ஒரு வரவேற்பில் கலந்து கொண்டு இரவு 9.30 மணி புகைவண்டியில் ஊர் செல்ல வேண்டும் என்றார்.

பெரியநாயகி காபி கொண்டு வந்து தர, ரவி வீட்டில் எல்லோரும் நலமா, சண்முகம் ரத்னா வாழ்க்கை எப்படி செல்கிறது என்று கேட்டு, இந்தாருங்கள் குடும்பமே கிறங்கும் வடை என்று தந்தார்.

நந்தன் மிகவும் மகிழ்ச்சி என்றார். இந்த வீட்டில் அந்த வடையே இப்போது இல்லை என்றார்.

நந்தன். ரவி ஏதோ சொல்ல முனைந்தவர் பின் வேண்டாமென இருந்து விட்டார்.

ரவிக்கு நன்றி கூறிய நந்தன் வடை மிகவும் சுவையாக மற்றும் மொறுமொறுப்பாகவும் உள்ளது என்றார்.

சற்று நேரம் பேசி விட்டு ரவி கிளம்பினார்.

மாலை வந்த சண்முகம் வடையைச் சுவைத்து விட்டு யார் செய்தது என்றார்.

நந்தன் ரவி வந்து சென்றதைக் கூறினார்.

வடை வீட்டில் ஒரு வாசனையுடன் வலம் வந்தது.

ரத்னா வந்ததும் அவருக்கு வடையைத் தர, அவள் பாதி போதும், எனக்கு இந்த வடையில் மனம் லயிக்காது என்றார்.

பெரியநாயகி பேச வார்த்தையின்றி நகர்ந்தார்.

நந்தன் வீட்டிற்கு வந்தவர்கள் இந்த வடையை எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.

சிலர் என்ன இந்த வீட்டின் கிறக்கமான வடை ஏன் பண்ணுவதில்லை என்ற கேள்விக்கு பதில் கூற முடியாமல் பெரியநாயகி திணறுவார்.

மருமகளுக்கு விருப்பமில்லாததை செய்ய மாட்டீர்களா என்று கேட்டு விடுவார்களோ என்ற பயம்தான்.

நந்தன், பெரியநாயகி மற்றும் சண்முகம் இரண்டு நாள் பயணமாக சென்று விட்டு காலை 11 மணியளவில் வீடு திரும்பினார்கள்.

ரத்னா மட்டும் தனியாக தங்கி இருந்தார். பெரியநாயகி மற்றும் எல்லோரும் சாப்பிட அமர்ந்த போது பரிமாறப்பட்ட வாசனை நிரம்பிய இந்த வீட்டு வடை அவர்களை கிறக்கம் செய்தது. சண்முகம் ரத்னா சூப்பர் எப்படி இவ்வளவு சுவையாக செய்தாய் என்றதும் பெரியநாயகி நன்றாகவே சமையல் கற்றுக் கொண்டாய் என்றார்.

நந்தன் இதையெல்லாம் கவனிக்காமல் வடை சாப்பிடுவதில் மும்மரமாக இருந்தார்.

அப்போது ஊரிலிருந்து வந்த உறவினர் வாசனையை முகர்ந்து என்ன இந்த வீட்டின் கிறக்கம் மயக்குதே யார் பண்ணது என்றார்.

பெரிய நாயகி நமது மருமகள் ரத்னா தான் என்றார். வடை வாசனைஅறை முழுவதும் பரவி இருந்தது.

ரத்னாவிற்கு மனதில் தன்னால் இந்த வீடே அந்த வடையை மறக்கணுமா என்று நினைத்து தான் தயார் செய்துள்ளார், இதை எப்படி வெளியே சொல்வது என்று நினைத்த ரத்னா மனதிற்குள் இதைப் போட்டு புதைத்தை அவரே அறிவார். எல்லோரும் உணவு அருந்தியதும் சற்று கண் அயராலெமன பெரியநாயகி நினைத்தபோது, சண்முகம் அம்மா வாயேன் ரத்னா மயங்கிவிட்டார் என்று கத்தினார். பெரியநாயகி வந்து பார்ப்பதற்குள் வந்திருந்த உறவினர் ஒரு டாக்டர் என்பதால் உடனே பரிசோதித்து எல்லாம் நல்ல செய்தியே. உங்கள்வீட்டு கீரை வடை கிறக்கம் ஒரு வாரிசை தந்துள்ளது இன்று என்ற சொன்ன வேளையில், உள்ளே நுழைந்த ரத்னா அம்மா மற்றும் அப்பா நல்ல சேதி சொல்லும் வேளையில் வந்துள்ளோம் என்றனர்.

, சண்முகம் ரத்னாவின் கையைப் பிடித்து மானசீகமாய் நன்றி சொன்னார். வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டில் சிரிப்பலை வலம் வந்தது.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *