செய்திகள்

அந்தமான்- நிக்கோபாரில் 6.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

போரட்பிளேயர், ஆக. 3–

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நடுத்தர மற்றும் சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் இன்று காலையில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. என்சிஎஸ் படி, காலை 6:27 மணிக்கு போர்ட் பிளேயரில் ஏற்கனவே 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சக்தி வாய்ந்த இரண்டாவது நிலநடுக்கம் ஒரு மணி நேரம் கழித்து சுமார் 7.30 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இரண்டு நிலநடுக்கங்களால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *