செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

போர்ட்பிளேர், டிச. 29–

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து புவியியல் ஆய்வு மாயம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஃபோட் பிளேர் நகரில் இருந்து தென்கிழக்கில் 165 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடைமைகள் சேதமோ ஏற்பட்டதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை. எனினும் திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். இதற்கு முன்னதாக, நவம்பர் தொடக்கத்தில் போர்ட் பிளேரின் தென்கிழக்கில் இதே அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *