வாழ்வியல்

அத்திப்பழச்சாறு குடித்தால் உண்டாகும் நன்மைகள்–2

மலச்சிக்கலை குணமாக்கும்

அத்திப்பழ ஜூஸ் மலச்சிக்கல் பிரச்சனைளை சரிசெய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்திப்பழ ஜூஸ் உடன் ஓட்ஸ் பால் சேர்த்து கலந்து உட்கொள்ள, மலச்சிக்கலுக்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் 300 மிலி ஓட்ஸ் பாலுடன், 90 மிலி அத்திப்பழ ஜூஸ் மற்றும் சிறிது அதிமதுரப் பொடி சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். அதிலும் இந்த பானத்தை காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், அத்திப்பழ ஜூஸை முந்திரிப்பழ ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் உடனே விலகும்.

சிறுநீர்ப்பை கற்களைக் கரைக்கும்

சிறுநீர்ப்பை கற்கள், கனிமச்சத்துக்களின் தேக்கத்தினால் சிறுநீர்ப்பையில் கற்களாக உருவாகும். அடர்த்தியான அத்திப்பழ ஜூஸில் நல்ல வளமான அளவில் கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதோடு இதில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் மிகவும் குறைவு. இந்த ஜூஸை ஒருவர் குடித்து வந்தால், சிறுநீர்ப்பை கற்களில் இருந்து விடுபடலாம். தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

தசை வளர்ச்சிக்கு உதவும்

அத்திப்பழ ஜூஸில் கார்போஹைட்ரேட் மற்றும் நேச்சுரல் சர்க்கரை அதிகம். ஆகவே இது பாடி பில்டர் போன்ற உடலைப் பெற உதவும். பொதுவாக பாடிபில்டர் போன்ற கட்டுடலைப் பெற நினைப்போர், புரோட்டீன் ஷேக்குகளை வாங்கிக் குடிப்பார்கள். ஆனால் அத்திப்பழ ஜூஸ் இதற்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

ஆகவே, உங்களுக்கு தசைகள் நன்கு வளர்ச்சி பெற்று, பாடி பில்டர் போன்று உடல் வேண்டுமானால், அன்றாட உடற்பயிற்சிக்குப் பின் அத்திப்பழ ஜூஸைக் குடியுங்கள்.

மேலும், உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அப்படியெனில், அத்திப்பழ ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது. இதனைக் குடித்தால், உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். எனவே உங்கள் எடையைக் குறைக்க அத்திப்பழ ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதை மறவாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *