கதைகள் சிறுகதை செய்திகள்

அதுக்கென்ன இப்போ… – ஆர். வசந்தா

Makkal Kural Official

மனோன்மணி வீட்டிற்கு ஒரு திருமண அழைப்பிதழ் தபாலில் வந்தது. அது அவளுடன் ஆரம்பப் பள்ளியில் படித்த சரோஜினி பேத்தியின் திருமண அழைப்பிதழ் என்று போட்டியிருந்தது. முன்னாளில் அது ஒரு குக்கிராமம்.

மனோன்மணியின் உறவினர் வீட்டுக் கல்யாணம் என்பதால் அங்கு போயிருந்தாள். இப்போது ஒரு நகரமாக மாறியிருந்தது. அதே திருமணத்திந்கு தன்னுடன் படித்த சரோஜினியும் வந்திருந்தாள். தன்னுடன் படித்தவளைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை.

இருவரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் தான். பள்ளிக்கூடம் இருந்தது. அடுத்த ஊரில் இருந்ததால் சேர்ந்தே போவார்கள். சரோஜினி அந்தப் பள்ளியில் 8 வது வகுப்பு வரை மட்டுமே படித்தாள். சற்று வசதியான குடும்பம். 3 வருடத்தில் திருமணமும் நடந்தது.

மனோன்மணி எஸ்.எஸ்.எல்.சியும் முடித்து கல்லூரியும் படித்தாள். இளநிலை பட்டதாரியும் கூட. பிறகு தான் திருமணம் நடந்தது.

பிறகு இருவருக்கும் தொடர்பே இல்லை. இருவரும் பாட்டியானதும் தான் சந்திக்க நேர்ந்தது. தங்களுடன் படித்த மற்றவர்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். தற்செயலாக தன் வீட்டு விலாசத்தை மனோன்மணி சரோஜினிக்கு கொடுத்திருந்தாள். திருமணம் முடிந்ததும் அவரவர் வீட்டிற்கு திரும்பி விட்டனர்.

2 ஆண்டுகள் ஓடி விட்டன. சரோஜினி தன் மகனிடம் தன்னுடன் படித்த மனோன்மணியைப் பற்றி கூறியிருந்தாள். அவளும் தற்போது சென்னையில் தான் வசிப்பதாகவும் சொன்னாள். அவளுடைய விலாசத்தை சரோஜினியின் மகன் பார்த்திபன் தன் அம்மாவின் பீரோவில் கிடைத்ததும் தன் மகள் திவ்யாவின் திருமண பத்திரிகையை தபாலில் அனுப்பி வைத்தான். ஆனால் பார்த்திபனுக்கும் அவன் மனைவிக்கும் மனோன்மணி யாரென்றே தெரியாது. பத்திரிகை அனுப்பியது சரோஜினிக்கே தெரியாது.

மனோன்மணியின் கையில் திருமண பத்திரிகை கிடைத்ததும் மிகவும் உற்சாகமாக இருந்தாள். ஒரு மாதத்திற்கு முன்பே எப்படி போவது என்ன நகை, சேலை கட்டுவது என்று திட்டமிட ஆரம்பித்து விட்டாள்.

எனினும் வீட்டில் வேறு யாருக்கும் அந்த சுவாரசியம் கிடையாது. கணவன் என்னை கூப்பிடாதே உன் மகனை அழைத்துப் போ என்று கூறிவிட்டார். மகன் என்னை யாருக்கும் அந்த வீட்டில் தெரியாது. நான் வர மாட்டேன் என்று கூறிவிட்டான். மருமகளும் அதே பதிலைச் சொன்னாள். மகள் மட்டும் சரிம்மா வருகிறேன் என்று கூறினாள்.

மகளுக்கும் கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது. இத்தனை வருடத்திற்கு பிறகு யாராவது நம்மை அடையாளம் தெரிந்து கொள்வார்களா? என்று அம்மாவைக் கேட்டாள். சரோஜினி நன்றாக பழகுவாள். கண்டிப்பாக நான் போய்த்தான் தீருவேன் என்று உறுதியாக நின்றாள்.

ஆனால் மனோன்மணிக்கு தன்னைப் போலவே வயதாகியிருக்கும். நடக்க முடியுமோ, முடியாதோ என்று நினைக்கவில்லை. தன்னைப் போலவே ஆர்வமிக்கவளாக இருப்பாள் என்று தான் நினைத்தாள் மனோன்மணி.

கல்யாண நாளும் வந்தது. திருமணம் நடக்கும் மண்டபம் ஊரைவிட்டு தள்ளியே இருந்தது. மனோன்மணி தன் மகள் மணிமேகலை ஆட்டோவில் சென்றார்கள். அது விலையுயர்ந்த மாளிகை. ஆடம்பரமாக இருந்தது.

உள்ளே நுழைந்ததும் வீட்டார்களைப் காணோம். அந்த சமையல்கார ஆட்களையே நாகரீக உடையணிந்து கும்பிடு போட்டு நாகரீக உடையில் வரவேற்றனர்.

மனோன்மணியின் பார்வை சரோஜினியை தேடுவதில் இருந்தது. எப்படியோ சரோஜினியை பார்த்து அருகில் சென்றார்கள். அவள் அவர்களை அன்புடன் உபசரித்தாள். ஆனாலும் சரோஜினிக்கு உடம்பு தள்ளாட்டமாகத்தான் தளர்ந்திருந்தாள். தன் அருகில் உட்காரச் சொன்னாள். சாப்பிட வற்புறுத்தினாள்.

சரோஜினியை கை குலுக்குவதும், பேத்தியைப் பற்றி விசாரிப்பதாகவே இருந்தார்கள். மனோன்மணிக்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. அவளின் நிலை. சாப்பிட்டதும் மணமக்களிடம் மொய் கவரையும் கொடுத்து விட்டாள். மணமக்களை வாழ்த்தி விட்டு சொல்லி விட்டுக் கிளம்பி விடலாம் என்று அருகில் சென்றாள்.

அவளிடம் போய் என் பெயர் மனோன்மணி உன் மாமியார் சரோஜினியுடன் படித்தவள் என்று சொன்னாள். அதற்கு அந்தப் பெண், ‘அதற்கென்ன இப்போ’ என்று கண்டுக்காமல் பேசினாள். உடனே அடுத்தவர்களுடன் பேசவும் போய் விட்டாள்.

மனோன்மணிக்கு யாரோ தன் தலையில் சம்மட்டியாால் அடிப்பது போல் இருந்தது. நல்ல வேளை மகள் வைஷ்ணவி சற்று தள்ளி நின்றிருந்தாள். உடனே சரோஜினியிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள். தன் மகன், மகள் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *