சிறுகதை

அதிர்ச்சி | சீர்காழி . ஆர். சீதாராமன்

” பள்ளி வேலை நாள். அன்று வகுப்பறையில் பல மாணவ மாணவியரின் நடமாட்டம் .ஆசிரியர்கள் கவனப் பார்வை அதிகமாக இருந்தது .

இது வரை வயிற்றை மறைத்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி பத்மா மெதுவாக கழிப்பறை பக்கம் ஒதுங்கினாள் .

சிறிது நேரத்தில் சுகப்பிரசவம் ஆக தொப்புள் கொடியை பிளேடால் தானே நறுக்கி விட்டால் பத்மா .

கொஞ்சம் விசித்திர வாடை வரவே சென்று பார்த்த கமலா டீச்சருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆம்புலென்ஸ் அழைக்கப்பட்டு பத்மாவும் குழந்தையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று டாக்டரிடம் காட்டினார்கள் ஆசிரியர்கள் .

முதலுதவி மற்றும் மருந்து மாத்திரை தந்து உணவும் கொடுத்து பத்மாவிற்கு ரெஸ்ட் கொடுத்தனர் .குழந்தையை சுத்தப்படுத்தி பத்திரப் படுத்தினார் நர்ஸ் விமலா .

படிக்கும் போதே கர்ப்பம் . பள்ளி பெயரை கெடுக்குது என்று புலம்பினார் கமலா டீச்சர் .

விடுங்க டீச்சர் இது எனக்கு சகஜம் என்றார் டாக்டர் ராகுல் சர்வ சாதாரணமாக .

பட படப்பும் உடல் நடுக்கமும் ஒரு சேர வந்திட, மனதை ஒரு நிலை பத்திய போதும், கண்களில் நீர் கசிய யாருக்கும் தெரியாமல் மீண்டும் பத்மா அறைக்குள் நுழைந்த நர்ஸ் விமலா குழந்தையை எடுத்து அணைத்து முத்தமிட்டாள் .

தன்னைப் போன்று இன்னொரு தொட்டில் குழந்தையை அதன் நிலையை எண்ணி கண்ணீர் கசிந்த படியே, எனக்கு இது இன்ப அதிர்ச்சி தான் என்கிற நினைவலை அசை போட்டாள் .

தொட்டில் குழந்தை தொடர்கதை தான் பிஞ்சில் பழுக்கும் பெண்கள் உள்ளவரை தன்னையும் சேர்த்து என்று புலம்பினாள் நர்ஸ் விமலா தன் மனதிற்குள் மீண்டும் ஒரு முறை ….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *