வர்த்தகம்

அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தியன்ஆயில் ரொக்க பரிசுகள்

சென்னை, ஆக.16–

இந்தியன் ஆயில் தெற்கு மண்டல செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) கே.சைலேந்த்ரா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைவர் பி. ஜெயதேவன் மற்றும் மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

ஊழியர்களிடையே இணையதளம் வாயிலாக சைலேந்த்ரா ஆற்றிய உரையில், கொரோனா (கோவிட்–-19) மற்றும் அதன் விளைவான முழு அடைப்பு காரணமாக, நமக்கு பல்வேறு சிரமங்கள் உண்டான போதிலும், இந்தியன்ஆயில், பெட்ரோல் நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கும் தங்கு தடையின்றி அத்தியாவசிய எரிபொருளையும் கியாஸ்யும் கொண்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது, ஊழியர்களுக்கு நீண்ட கால சேவைப்பணிக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னையில் அரசு பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்ற நான்கு மாணவிகளுக்கு தலா ரூ.10,000 ஒரு முறை ஸ்காலர்ஷிப்-க்கான காசோலைகளை, சென்னை இந்தியன்ஆயில் பவனில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, பி. ஜெயதேவன் வழங்கினார்.

இந்திய நாட்டின் விடுதலையின் பிளாட்டினம் கொண்டாடத்தையொட்டி, இந்நிறுவனம், 2021ஆம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலத்திலும், போர்டு தேர்வுகளில் அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற, அதிகளவில் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பைச் சார்ந்த 75 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கி வருகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், நாடெங்கிலும் உள்ள மாணவிகளுக்கு மொத்த கல்வி உதவித்தொகையாக ரூ. 2.5 கோடி வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *