செய்திகள்

அண்ணா தி.மு.க. வெற்றி பெற சேலத்தில் தமிழ்மகன் உசேன் தலைமையில் தர்காவில் பிரார்த்தனை

சென்னை, மார்ச். 15

பார்லிமெண்ட் தேர்தல், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றி பெற சேலத்தில் தமிழ்மகன் உசேன் தலைமையில் தர்காவில் பிரார்த்தனை நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் அண்ணா தி.மு.க., நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத் தேர்தலில் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான தமிழ்மகன் உசேன், சேலம் புறநகர் மாவட்டம், சேலம் சன்னியாசிகுண்டு ஹஜ்ரத் பீருல் ஹாதி பாவா தர்ஹாவில் சிறப்பு பிரார்த்தனை (துஆ) செய்தார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே. செல்வராஜ், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பல்பாக்கி கிருஷ்ணன், சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் நெத்திமேடு முத்து, சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சுப்ரமணியம், சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வேப்பேரி ராஜேந்திரன், 52-வது வட்ட கழகச் செயலாளர் ராமசுப்ரமணியம், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை வட்ட செயலாளர் சகாயம், மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வி.டி. மணி, சேலம் அப்துல் ரஷீது, தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ஜெ. வெங்கடேசன், தர்கா முத்தவல்லி ஹாஜி பாதுஷா மொய்தீன், ஹஜ்ரத் நவாஸ்கான், ஜெ. அப்துல் சலாம், தர்பான் எஸ். சுல்தான், உதவியாளர் அப்துல் காதர், தூத்துக்குடி ஜான்சன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *