* கல்வியில் மேன்மை * தொழில் வளர்ச்சியில் முதன்மை * பெண்கள் முன்னேற்றம் * விரிவான மருத்துவ வசதிகள்
இலவசமாக பை நிறைய மாதாந்திர மளிகை சாமான்கள்
அடுத்த வாரம் ஏப்ரல் 6 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றுவிடும். முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாள் மே 2. அதுவரை பரீட்சை முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவர்களின் பதட்டத்தை மனதில் கொண்டு தமிழகம் காத்திருக்கும்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சியின் சாதனைகளை திரும்பிப் பார்க்க வேண்டும்.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் ஜெயலலிதாவை நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்துத்தான் 2011–ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்து ஆட்சியில் அமர்த்தினர்.
தொழிற்கூடங்கள் அச்சமயத்தில் மின்சார தட்டுப்பாடு காரணமாக முடங்கிக் கிடந்தது. அதுவரை ஆட்சியில் இருந்த தி.மு.க. தலைவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்ததும் மத்தியில் ஆட்சியில் மந்திரிகளாக இருந்ததும் அறிந்ததே!
ஆனாலும் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டதே, என்ன காரணம்? தமிழகத்தில் மின் நிலையங்கள் முழு தயாரிப்பு நிலையில் பணியாற்றாமல் தவிர்த்து இருந்ததற்கான சிக்கல்கள் என்ன?
தமிழகத்தில் நீர் மின்உற்பத்தி இருக்கிறது. நிலக்கரியை எரித்து அனல் மின் உற்பத்தியும் இருந்தது, அணுமின் நிலையங்களும் கூட இருந்தது அல்லவா?
நீர் தட்டுப்பாடு காரணமாக நீர் மின் உற்பத்தி பாதித்திருந்தால் ஏன் மீதமுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் சரிவர இயங்கவில்லை?
அப்படியென்றால் ஆட்சியாளர்களின் நிர்வாக கோளாறு தானே அதற்கான காரணமாக இருந்திருக்க வேண்டும்!

ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தவுடன் நிலைமையை சீர் செய்து ‘இருட்டில்’ மூழ்கியிருந்த தமிழகத்தை வெளிச்சம் பெற வைப்பேன் என்று உறுதியைத் தந்ததுடன் குறுகிய காலத்திலேயே எல்லா மின்சார உற்பத்தி மையங்களையும் சரிவர இயங்க வைத்தார்.
காற்றாலை மின்சார உற்பத்திக்கும் முக்கியத்துவம் தந்து மின்உற்பத்தி அதிகரிக்க ஏற்பாடுகள் செய்தார். அதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தை புதிய வேகத்துடன் செயல்படுத்தக் களமிறங்கினார்.
பல்வேறு சதிகளின் வலையில் சிக்கி இருந்த அந்த திட்டத்தை செயல்படுத்திய ‘செயல் புயல்’ ஜெயலலிதா ஆவார்.
காரணம் அப்போது மத்தியில் சோனியா, கருணாநிதி, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தது.
அவர்களை எல்லாம் தனது சாதுர்யத்தால் வென்று கூடங்குளம் அணுமின் திட்டம் என்ற வரலாற்று சாதனையை செய்து காட்டினார்.
அன்று அவர் தந்த உத்தரவாதம் தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது. மேலும் மின் மிகை மாநிலமாக உயரும் நாட்டிற்கே மின்சாரத்தை வினியோகிக்கும் என்ற உறுதியையும் தந்தார்.
சொன்னதுடன் நின்றுவிடாமல் சொன்னதைச் செய்துகாட்டி தமிழகத்தை தொழிற்புரட்சியில் சிறக்கச் செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் வளர்ச்சி குறியீடுகளில் சாதித்து வருவதை பார்க்கும்போது அன்று அவரது ஆட்சி திறன் காரணமாக மின் மிகை மாநிலமாக உயர்த்தியதை பாராட்டாமல் இருக்கவே முடியாது.
மேலும் பதவியில் அமர்ந்த நாளில் ஏழு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இப்படி அவர் பதவி ஏற்ற நாளில் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சி சரித்திரத்தில் அதிமுக்கிய அம்சங்களாகி விட்டன.
எதையும் மந்திரத்தால் பெறமுடியாது! அதை முழுமூச்சுடன் திட்டமிட்டே பணியாற்றினால் தான் பெறமுடியும் என்பதை உணர்த்தியவர் ஜெயலலிதா. அவர் வழியில் அண்ணா தி.மு.க. தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த பல்வேறு சிக்கல்களை சந்தித்த விதம் இன்றைய அண்ணா தி.மு.க. தலைவர்களுக்கு அதே வேகமும் விவேகமும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் அரசியல் காரணங்களுக்கும் அப்பாற்பட்டு அனைத்து ஊடகங்களாலும் பாராட்டு பெற்றதை கண்டோம்.
ஆக அண்ணா தி.மு.க. கட்சியின் ஆட்சி அக்கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர். கண்ட கனவை நனவாக்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் கொள்கை பார்வையால் அதாவது விஷனால் உருவான பல புதுப்புது திட்டங்கள் தமிழகத்திற்கு மதிப்பூட்டலாக அதாவது Value addition ஆக இருந்ததை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அவர்களது அமைச்சரவை சகாக்களும் சிறப்பாக கண்காணித்து அவை முழுவீச்சில் செயல்பட வைத்துள்ளனர்.
மேலும் தமிழகம் வரும் நாட்களில் வளமையான பாதையில் பயணிக்க பல்வேறு நலத்திட்டங்களையும் நாடே போற்றும் நற்சாதனைகளாக செய்து வருகிறார்கள்.
ஆக கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் பொற்கால ஆட்சியே நிலவுகிறது. தமிழகம் மேன்மேலும் உயர்ந்து புதிய பாதையில் மேலும் வளர்ச்சிகள் காண உரிய தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அரசாக இருக்கிறது.
இதையெல்லாம் முன்வைத்தே அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் மீண்டும் ஆட்சியில் தொடர ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அண்ணா தி.மு.க.வே தமிழகத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போட வைக்கும் என்ற நம்பிக்கை வைத்தே தமிழக வாக்காளர்கள் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சியே தொடர வாக்களிப்பார்கள், என்ன அப்படித்தானே!