செய்திகள்

அண்ணா தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமர வேண்டி முத்தியால்பேட்டை ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகம்

அண்ணா தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமர வேண்டி முத்தியால்பேட்டை ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகம்:

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கோகுல இந்திரா பங்கேற்பு

எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாடு

1008 தேங்காய் உடைப்பு

காஞ்சீபுரம்,நவ.21-

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டி, காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், ஆன்மீக பிரமுகருமான ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில், முத்தியால்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகங்கள் இன்று காலை நடந்தன.

வண்ண வண்ண மலர்களால் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்புரிந்தார். மேலும், 1008 தேங்காய் உடைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பாளருமான எஸ்.கோகுல இந்திரா பங்கேற்று ஆஞ்சநேயரை மனமுறுகி வழிபட்டார். கோகுல இந்திராவுக்கு ஆர்.வி.ரஞ்சித்குமார், கோவில் அர்ச்சகர்கள் பொன்னாடை அணிவித்து, கோவில் பிரசாதங்களை வழங்கினார்கள். பிறகு, கோவில் அருகே பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானங்களை எஸ்.கோகுல இந்திரா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகி எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, மாநில டான்சில்க் தலைவர் பூக்கடை ஆர்.டி.சேகர், அம்மா பேரவை நிர்வாகி மார்க்கெட் வி.அரிக்குமார், அண்ணா தி.மு.க. நிர்வாகி வடகால் ஆர்.சவரிங்கம், மாங்காடு நகர கழக செயலாளர் எம்.பிரேம்சேகர், பாசறை நிர்வாகி எம்.பி.பரத்ராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், பொருளாளர் வக்கீல் வீ.வள்ளிநாயகம், முன்னாள் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி மோகனசுந்தரம், ஒன்றிய கழக செயலாளர்கள் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக எஸ்.கோகுல இந்திராவுக்கு ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆள் உயர மாலை மற்றும் -பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *