செய்திகள்

அண்ணா தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, செப்.14–

அண்ணா தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க. விவசாயப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.கே. வைரமுத்து இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். (இவர் ஏற்கெனவே வகித்து வரும் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.)

அண்ணா தி.மு.க. தலைமைக் கழக கூடுதல் நிர்வாகிகளாகவும், கழகத்தின் சார்பு அமைப்புகளுக்கான துணை நிர்வாகிகளாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட வர்த்தக அணி, கலைப் பிரிவு ஆகியவற்றின் நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அமைப்புச் செயலாளர்கள்

ப. மோகன் (முன்னாள் அமைச்சர், விழுப்புரம் தெற்கு மாவட்டம்), ஆர். முருகையாபாண்டியன், எம்.எல்.ஏ, (திருநெல்வேலி புறநகர் மாவட்டம்), என். சின்னத்துரை (கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை

துணைச் செயலாளர், தூத்துக்குடி மாவட்டம்)

செஞ்சி ந. ராமச்சந்திரன் (முன்னாள் மத்திய இணை அமைச்சர், விழுப்புரம் வடக்கு மாவட்டம்), எம். பரஞ்ஜோதி (முன்னாள் அமைச்சர், திருச்சி மாநகர் மாவட்டம்)

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள்

செ.ம. வேலுசாமி (முன்னாள் அமைச்சர், கோவை மாநகர் மாவட்டம்), பு.தா. இளங்கோவன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்டம்)

கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர்

ஐ.எஸ். இன்பதுரை, எம்.எல்.ஏ, (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்)

விவசாயப் பிரிவுத் தலைவர்

டி.ஆர். அன்பழகன் (கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை முன்னாள் செயலாளர், தருமபுரி மாவட்டம் )

விவசாயப் பிரிவுச் செயலாளர்

அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் அமைச்சர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்)

விவசாயப் பிரிவு இணைச் செயலாளர்

செ. தாமோதரன் (முன்னாள் அமைச்சர், கோவை புறநகர் மாவட்டம்)

வர்த்தக அணித் தலைவர்

அம்மன் கே. அர்ச்சுணன், எம்.எல்.ஏ, (கோவை மாநகர் மாவட்டம்)

வர்த்தக அணிச் செயலாளர்

சிந்து கே. ரவிச்சந்திரன் (ஈரோடு புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளர்)

கலைப் பிரிவுத் தலைவர்

திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான்

கலைப் பிரிவுச் செயலாளர்

திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

கலைப் பிரிவு இணைச் செயலாளர்

திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி. அன்பழகன்

கழக செய்தித் தொடர்பாளர்கள்

நிர்மலா பெரியசாமி, திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்

ஆ. இளவரசன் (மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்)

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள்

பி.வி. ரமணா (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம்), மாதவரம் வி. மூர்த்தி (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்), டி.கே.எம். சின்னையா (முன்னாள் அமைச்சர், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் )

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்கள்

எம்.கே. செல்வராஜ் (சேலம் மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்), தோப்பு க. அசோகன் (கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர்

வரகூர் ஆ. அருணாசலம் (முன்னாள் அமைச்சர், பெரம்பலூர் மாவட்டம்)

கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்கள்

தோப்பு என்.டி. வெங்கடாச்சலம், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர், ஈரோடு புறநகர் மாவட்டம்), பூங்காநகர் கு. சீனிவாசன் (வட சென்னை வடக்கு மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்கள்

அ. சுப்புரத்தினம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திண்டுக்கல் மாவட்டம்), எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், எம்.எல்.ஏ. (திருநெல்வேலி புறநகர் மாவட்டம்)

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்

தி.க. அமுல்கந்தசாமி (கோவை மாவட்டம்)

கழக மகளிர் அணி துணைச் செயலாளர்

வி.எம். ராஜலெட்சுமி (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்)

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்கள்

கா. லியாகத் அலிகான் (முன்னாள் வாரியத் தலைவர், தென் சென்னை தெற்கு மாவட்டம்), எஸ். அப்துல்ரகீம் (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்), முஹம்மதுஜான் (முன்னாள் அமைச்சர், வேலூர் கிழக்கு மாவட்டம்), சிடிசி அ. அப்துல்ஜப்பார் (கோவை மாநகர் மாவட்டம் )

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

வி. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ. (கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி).

கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *