செய்திகள்

அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை, மார்ச் 9–

தமிழக தேர்தலில் அண்ணா தி.மு.க. – -பாரதீய ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-–

“மக்கள் மத்தியில் முதல்வர், துணை முதல்வருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. வரும் தேர்தலில் அண்ணா தி.மு.க. -– -பாரதீய ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தே.மு.தி.க. கட்டாயம் எங்கள் கூட்டணிக்கு வரும்.

தி.மு.க.வின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள். 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொல்லி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது தி.மு.க. யாருக்காவது 2 ஏக்கர் நிலம் கொடுத்தார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *