செய்திகள்

அண்ணா தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்

சென்னை, மார்ச் 18

சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அண்ணா தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை, துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செம்மலை, அன்வர் ராஜா, விஜிலா சத்யானந்த், நடிகை விந்தியா, ஆர்.வி.உதயகுமார், பி.ரவீந்திரநாத் எம்.பி., லியாகத் அலிகான், கவிஞர் முத்துலிங்கம், வி.சரவணன், கே.ஆர்.சிங்கமுத்து, மனோபாலா, நிர்மலா பெரியசாமி, ஆர்.சுந்தரராஜன், போளூர் ஜெயகோவிந்தன், வையாபுரி, அனுமோகன், நூர்ஜஹான், வி.புகழேந்தி, கோபி காளிதாஸ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நட்சத்திர பிரச்சார பட்டியலில் இடம்பெற்றவர்களின் பயணம் உள்ளிட்ட செலவுகள் வேட்பாளர்களின் கணக்கில் வராது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து 7 நாட்களுக்குள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *