தேனி, டிச. 10:
அண்ணா தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அண்ணா தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்கள் முழுமையாக வந்தபிறகு அதுகுறித்து நான் பேசுகிறேன். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவருமே பிரிந்து கிடக்கின்றன. அண்ணா தி.மு.க. சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





