செய்திகள்

அண்ணா தி.மு.க. ஆட்சி அமைக்கும்: பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னை, மார்ச் 18–

தமிழகத்தில் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். தாராபுரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக இன்று காலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோவிலில் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பழனி தொகுதியில் பாரதிய ஜனதா போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில், தொகுதி கிடைக்காவிட்டாலும் அதை ஒட்டியுள்ள தாராபுரம் தொகுதி கிடைத்துள்ளது பெருமகிழ்ச்சி. கூட்டணி தர்மத்தை மதித்து அண்ணா தி.மு.க. வெற்றி பெற பாரதீய ஜனதா பாடுபடும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *