நாடும் நடப்பும்

அண்ணா தி.மு.க. அரசு தொடர வேண்டும், ஏன்?

* வேலை வாய்ப்புகள் * கிராம வளர்ச்சி * மகளிர் மேன்மை * கல்வி மேன்மை * அறிவுசார் புரட்சி

தமிழக பொருளாதார வளர்ச்சியில் மனித வளம்: எடப்பாடி, பன்னீர்செல்வம் தரும் உறுதி

இயற்கை சீற்ற சேதத்தை சரி செய்வதில் அண்ணா தி.மு.க. சாதனைரத்தத்தின் ரத்தமான என் உடன்பிறப்புகளே என
முழக்கமிட்டு மக்கள் நலனே தன் நலன் என்று
ஆட்சி செய்தார் எம்.ஜி.ஆர். மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தை தன் வாழ்வாக அமைத்துக் கொண்டு தமிழகத்தில் ஏழ்மையற்ற சமுதாயத்தை உருவாக்க அடுக்கடுக்காக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார் ஜெயலலிதா.

அவர்கள் வழியில் தற்போதைய அண்ணா தி.மு.க. தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சமுதாய நலன் காக்க சிறப்பாக செயல்பட்டு வந்ததை தமிழகம் அறியும். நாடு வளம் பெற நலமுள்ள மக்கள் மிக அவசியம் என்றுஉணர்ந்து கோவிட் 19 பெருந்தொற்று தமிழகத்தில் பரவவிடாமல் தடுக்க எடுத்த பல்வேறு இரும்புகர நடவடிக்கைகள், பொருளாதார சீர்திருத்த முயற்சிகள் நாட்டிலேயே தனித்தன்மை வாய்ந்தது, பிரதமர் மோடியால் பாராட்டப் பெற்றது.


பல திட்டங்களை பற்பல துறைகளில் சிறப்புற மேற்கொண்டது . தமிழக வாக்காளர்களை மீண்டும் அண்ணா தி.மு.க.வே மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் அமர்த்த
முடிவு செய்து இருப்பார்கள் என்பது தான் உண்மை.
மீண்டும் ‘அ.தி.மு.க. ஆட்சி தொடர
வேண்டும், ஏன்? என்ற கட்டுரை தொடரின் இரண்டாம் பாகம் இன்றைய இதழில்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்கள் என்ற பட்டியலில் முன் நிற்பது மனித வளம். அதாவது ஒரு ஊரின் ஜனத்தொகை ஆரோக்கியமாக இருக்கிறதா? கல்வி அறிவுத்திறன் மேன்மையாக இருக்கிறதா? வேலைவாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே இருக்கிறதா? என்பன ஆகும்.

கடந்த 20 ஆண்டுகளில் அதாவது 2001 மே 14 முதல் நடப்பு 2021 மே 2 தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வரும் வரை 15 ஆண்டுகளாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது அண்ணா தி.மு.க. ஆகும். அந்த 20 ஆண்டுகளில் 2006 முதல் 2011 வரை மட்டுமே அண்ணா தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தது. தி.மு.க.வோ அப்போது ‘மைனாரிட்டி’ அரசாக இருந்து தமிழகத்தில் இருள் ஆட்சியை நடத்தியது.

இன்று தமிழகம் கண்டுள்ள வளர்ச்சிகள், குறிப்பாக நவீன சமுதாய மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தி, அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வந்த சாதனைகள் அண்ணா தி.மு.க.வையே சாரும்.

தமிழகத்தில் மழை நீர் சேமிப்பு, மகளிர் காவல் நிலையங்கள், சாப்ட்வேர் புரட்சி, காவிரி நீரை பெற்றுத் தந்தது, கல்வித் துறையில் சாதனைகளை ஏற்படுத்தியது, பின் தங்கிய கிராமங்களுக்கும் மினி பஸ்களை ஓடவிட்டு அவர்களையும் நகர்ப்புற வளர்ச்சிகளில் ஈடுபட வைத்தது, மத்திய – மாநில உறவுகளை உறுதியாக்கி தமிழகம் வளர்ச்சி காண வைத்தது தமிழகத்தின் உரிமைகளை எந்நிலையிலும் பறிபோகாது பார்த்துக்கொள்ள உரிமைகளுக்கு குரல் கொடுப்பது வரை அண்ணா தி.மு.க. செய்த பல்வேறு சாதனைகளை நாடே அறியும்.

இயற்கை சீற்றங்கள்

இந்த 20 ஆண்டுகளில் தமிழகம் படு பாதகமான இயற்கை சீற்றங்களையும் கண்டது.

முதலில் சுனாமி, பிறகு பல்வேறு புயல் சேதங்கள், நெஞ்சைப் பிளந்த காட்டுத் தீ விபத்து, 3 நாள் தொடர் ராட்சத மழை பொழிவினைத் தொடர்ந்து தமிழகத்தின் தலைநகர் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது.

நகரமே மரங்கள் சாய்ந்து, சாலைகள் பெயர்ந்து, பல வீடுகள், கட்டிடங்கள் சேதாரமாகி, பிரதான சாலைகளில் படகு விடப்பட்டு பலர் உயிர் காப்பாற்றப்பட்ட கடுமையான சூழ்நிலையையும் சமாளித்தது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் உலகமே அதிர்ந்து, நிலைகுலைந்து சந்தித்து வரும் கொரோனா பெரும் தொற்றின் பாதிப்பு வளர எல்லாமே அண்ணா தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டவை.

எரிகின்ற அகல் விளக்கு காற்றிலே அணைந்து போகலாம்…

வற்றாத ஜீவநதிகள் கூட வற்றி நீரில்லாத வறண்ட பூமியில் மீன்கள் செத்து சாய்ந்து கிடக்கலாம்….

இரவுக்குப் பிறகு பகல் நிச்சயம் உண்டு என்பதை 21–ம் நூற்றாண்டின் 20 ஆண்டுகளில் தமிழகத்தில் மீண்டும் மீண்டும் புரட்சியை ஏற்படுத்தும் ஆட்சியை வழங்கி வருவது அண்ணாதி.மு.க தான்.

வானம் பார்த்த பூமியாக இருந்த காவிரி பாயும் தமிழகப் பகுதிகளில் விவசாயிகளின் மானம் காக்கும் பூமியாக மாற்றிய பெருமை ‘பாரதி கண்ட புதுமைப் பெண் ‘ ஜெயலலிதாவின் சாதனையாகும்.

விளையாத நிலமெல்லாம் விளைந்து பசுமை புரட்சியில் ஈடுபடும் செழிப்பை பெற காவிரி உரிமைகளை மீட்டுத் தந்தார். அதுவும் அண்ணா தி.மு.கவின் சாதனையாகும். அதுவும் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ், தி.மு.க. தலைமையிலான மத்திய அரசின் அநீதிகளை தட்டிக் கேட்டு வழக்காடி பெற்ற வெற்றியாகும்.

அதை என்றும் தமிழகம் அனுபவிக்க நாட்டின் சாசன பத்திரமாக வடிவம் கொடுத்த பெருமையும் ஜெயலலிதாவையே சாரும்.

தி.மு.க. எல்லா ஏழைகளுக்கும் டிவி தந்தது! ஆனால் கூரையில்லா குடிசைகளிலும் மின்சாரம் இல்லா தமிழகத்தில் அதை வழங்கியதால் என்ன பிரயோஜனம்?

இருண்ட தமிழகத்தின் நிலா வெளிச்சமாக ஜெயலலிதாவின் திறமைகள் இருந்தது. அதை எதிர்பார்த்தே தமிழகம் 2011–ல் ஆட்சி அதிகாரத்தை ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு மிகப்பெரிய தேர்தல் வெற்றியை வழங்கி ஆட்சியில் அமர்த்தியது.

மின்சார தட்டுப்பாடு என்ற சொல்லே இல்லாத தமிழகத்தை உருவாக்க ஜெயலலிதா தமிழகத்தில் அதிகபடி மின்சாரம் உற்பத்தியால் இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களுக்கு மின்சாரத்தை அனுப்பும் வல்லமை கொண்ட மாநிலமாக உயர்த்தினார்.

தமிழகம் அந்த சக்தியைப் பெற வைத்தது அண்ணா தி.மு.க. ஆட்சி தான்.

மனித வள மேம்பாடு

தற்போதைய கொரோனா பெரும் தொற்று மனித வள ஆரோக்கியத்திற்கு பெரும் சோதனையாகும். அது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திற்கே மிகப்பெரிய சவாலாகும். பல லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர். பல ஆயிரம் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டு விட்டன. தினக்கூலி தொழிலாளிகள் இன்றும் நிரந்தர வேலை பெறும் உறுதி இல்லாத ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கட்டுண்டு முடங்கி இருக்கிறார்கள்.

2021 மே 2 வெளிவர இருக்கும் தேர்தல் வெற்றி அறிவிப்பு யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறது? என்ற கேள்விக்கு விடையை ஏப்ரல் 6 அன்று தமிழகம் வாக்களித்து பதிலைக் கூறி விடும்.

ஆனால் யார் ஆட்சியில் இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் குறிப்பாக ஏழைகளும் நடுத்தர வர்க்க மக்கள் நிரம்பிய தமிழகத்து சமுதாயங்கள் விரும்புவது நடப்பு பிரச்சனைகளை அறிவார்ந்த அரசாட்சி மகிமையால் சிக்கல்களை சீர் செய்து தமிழகத்தை மீண்டும் வளமான பாதையில் வழி நடத்திச் செல்லும் அரசை தான்.

வெற்றி தர்மத்துக்கா? அதர்மத்துக்கா? என்னும் பிரச்சனை இம்முறையில்லை!

காலித்தனமோ, அராஜக ஆட்சியோ, கறுப்பு பண சாம்ராஜ்ஜியமோ இருக்கக் கூடாது.

நீதி, நேர்மை நிலைநாட்டப்பட்டு எல்லா துயரங்களிலிருந்தும் தமிழகம் வெற்றி கொண்டு செயல் பட ஊக்கம் தரும் ஆட்சியாளர்கள் தேவை.

காய்ந்த நதி நீரில் கருகிச் செத்துக் கருவாடாகக் கிடக்கும் மீன்களை சாப்பிடக் கொக்கு கூட வராது! ஆக குளங்களில் நீர் பெருகி நிறைந்திருக்க கொக்குகள் மகிழ்ச்சியுடன் சிறகடித்து பறந்து வரும், வயிறார சாப்பிட்டு ஆரோக்கியமாய் வாழும். அங்கேயே கூடு கட்டி பாதுகாப்பாய் அடுத்த தலைமுறையையும் உருவாக்கும்.

அப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களில் தமிழகம் ஏறுமுகமாக மாற வைத்து வருவது அண்ணாதி.மு.க. ஆட்சி தான் என்பதை தமிழகம் அறியும்.

தமிழகத்தின் மீட்சிக்கு புத்துயிர் தரும் வல்லமை அண்ணா தி.மு.கவிற்கே இருப்பதாக தெரிகிறது.

அண்ணா தி.மு.க.வின் தேர்தல் உறுதிமொழிகள் அதை உறுதி செய்கிறது.

நோயற்ற வாழ்வின் மேன்மையை உணர்ந்தவர்கள் என்பதால் நமது மாநில மாணவ – மாணவியர் தரமான மருத்துவக் கல்வி பெற நவீனங்கள் கொண்ட மிகப்பெரிய மருத்துவ கல்விக் கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டன.

அதில் தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் படித்து பயன்பெற ஏதுவான இட ஒதுக்கீடு பெற்று உள்ளது.

அது மட்டுமா? தாய் மொழி தமிழில் படித்தவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் காணும் கனவு மெய்ப்பட ஏதுவாக அந்த இட ஒதுக்கீட்டில் விசேஷ உள் ஒதுக்கீடையும் பெற்று அதை சீரிய முறையில் அமுல்படுத்தி பல பின்தங்கிய பிரிவினர் இல்லங்களிலிருந்து மருத்துவர்களை உருவாக்கி வரும் மாநிலம் தமிழகம் ஆகும்.

இப்படி அதிகப்படி மருத்துவர்களைத் தமிழகமெங்கும் ‘மினி கிளினிக்’ அதாவது மாநகராட்சிகளிலும் பஞ்சாயத்துகளிலும் கிராமங்களிலும் உள்ள கட்டுமானத்தில் எல்லாம் சிறு மருத்துவ சேவை மையங்களைப் போர்க்கால அடிப்படையில் உருவாக்கி, டாக்டர்கள், செவிலியர்களை பணியமர்த்தி மக்களுக்கு மருத்துவ சேவைகள் சென்றடையச் செய்தனர்.

இந்தப் புரட்சியை வடிவமைத்தது – எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தற்போது அண்ணாதி.மு.க.வின் இருபெரும் தலைவர்களாக உயர்ந்து இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மக்களுக்கு மருத்துவ சேவைகள் சென்றடைய மகத்தான சாதனையைச் செய்து மனித வளத்தை உயரச் செய்திருக்கிறார்கள். அவர்கள் – மத்திய அரசு மற்றும் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளை பெற்றிருக்கிறார்கள்.

இப்படி மனித வளம் பாதுகாத்து நல்லாட்சியை வழங்கும் அண்ணா தி.மு.க. இதோ மக்கள் மன்றத்தில் மீண்டும் வாக்கு சேகரிக்க கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் அண்ணா தி.மு.கவா? என்ற காழ்ப்புணர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மனதில் புகைச்சல்கள் ஏற்பட்டு வருவதைப் புரிந்தவர்கள் தயாரித்த தற்போதைய தேர்தல் கணிப்புகளில் இருக்கும் நடுநிலையற்ற தன்மையை நாட்டு மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

இப்படியாக பொருளாதாரத்திற்கு ஊக்கம் தரும் திட்டங்களை வாக்குறுதியாக தந்துள்ளார்கள். இலவசங்கள் தரப்படுவது உடனடி முதல் உதவி, அதுவே நிரந்தரத் தீர்வாகாது.

அதைத்தான் அண்ணா தி.மு.கவை உருவாக்கிய எம்ஜிஆர் புரிந்துகொண்டார்; அதைத் தன் லட்சியக் கனவாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார்.

எம்.ஜி.ஆரின் வழியில் ஜெயலலிதா பொறுப்பேற்ற நாள் முதலாய் அந்த உயர்ந்த லட்சிய கனவு முழுமையாக நடைமுறையில் வெற்றி பெற வைத்த சாமர்த்தியசாலி ஜெயலலிதா ஆவார்.

ஜெயலலிதாவின் ‘விஷன் 2023’ தமிழகத்தின் பெருமைகளை உலகமே கண்டு வியந்தது, மடை திறந்தவுடன் பாய்ந்து ஓடி வரும் நீரின் வேகத்துடன் கரைபுரண்டு வரத் துவங்கியது அந்நிய முதலீடுகள்.

அதே புரட்சிகர திட்டங்கள் திறம்பட வடிவமைத்ததை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மெருகேற்றி தமிழகத்தின் பொருளாதாரம் மேலும் வளமையுடன் வலுவாக உயரச் சிறப்பான அம்சங்களை கனவு திட்டங்களாக உறுதி தந்து கொரோனா பெரும் தொற்றிலிருந்து தமிழகத்தை பாதுகாத்தது போல், தமிழகத்தின் பொருளாதாரம் மேன்மை பெற அவற்றிற்கு புத்துயிர் கொடுக்க சீரிய திட்டங்களை அறிவித்து இருக்கும் அண்ணா தி.மு.க. மீண்டும் மூன்றாவது முறையாக தொடர் வெற்றி கண்டு அரசாட்சி புரிய வேண்டும் என்பதை தமிழகம் புரிந்து கொண்டு இருக்கிறது.

இப்போது புரிகிறதா ஏன் அண்ணா தி.மு.கவின் ஆட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெற ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *