செய்திகள்

அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற தேரடி ஆஞ்சநேயருக்கு 1100 வடைமாலை, 108 தேங்காய் உடைத்து வாலாஜாபாத் பா.கணேசன் வழிபாடு

காஞ்சீபுரம், ஜன.13 –

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு, வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக கோட்டையில் அமர வேண்டி, காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி, ஆஞ்சநேயருக்கு பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. அவருக்கு 1100 வடைமலை சாற்றப்பட்டு, 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டது.

பிறகு வண்ண வண்ண மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் வந்திருந்த பக்தர்களுக்கு கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் அறுசுவை அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், மாநில டான்சில்க் தலைவருமான பூக்கடை ஆர்.டி.சேகர், அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், பொருளாளர் வக்கீல் வீ.வள்ளிநாயகம், பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, காஞ்சீபுரம் நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின், ஒப்பந்ததாரர் பிரவீன், பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜி.விஸ்வநாதன், ஏ.கேசவன், யுவராஜ் என்கிற துரை, கே.வாசு, ராதாகிருஷ்ணன், கவிஞர்கள் கூரம் துரை, எஸ்.முருகவேள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இதற்கான ஏற்பாடுகளை வாலாஜாபாத் பா.கணேசன் சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *