செய்திகள்

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை, படங்களுக்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் மாலை அணிவித்தார்

உத்திரமேரூர் மத்திய ஒன்றியம் பெருநகரில்

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை, படங்களுக்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் மாலை அணிவித்தார்

காஞ்சீபுரம், ஆக. 5-

காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் உத்திரமேரூர் மத்திய ஒன்றியத்தில் உள்ள பெருநகர் ஊராட்சிக்கு சென்று அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் மற்றும் படத்திற்கும் மாலைகள் அணிவித்து வணங்கினார்கள். பிறகு கழக தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

உத்திரமேரூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் களியாம்பூண்டி தங்கபஞ்சாட்சரம் தலைமையில் 22 ஊராட்சியை சேர்ந்த கழக தொண்டர்களும், நிர்வாகிகளும், புதிய மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது புதிய மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் பேசுகையில், அம்மாவின் ஆசியுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் கொரோனா விலக வேண்டி, முதல்வரும், துணை முதல்வரும், இரவு பகல் பாராமல் அயராது பணியாற்றி தமிழக மக்களின் நலனை காத்து வருகின்றனர். நீங்கள் அனைவரும் வருகிற சட்டமன்ற தேர்தலில், பெருவாரியான வாக்குகளை அண்ணா தி.மு.க.விற்கு அளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் எப்போதும் அம்மாவின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் மலரும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகி எஸ்.எஸ்.ஆர் சத்தியா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், முன்னாள் எம்.பி. காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஓ.வி.வரதன், மாவட்ட பாசறை நிர்வாகி திலக்குமார், அழிச்சூர் டி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசீலன், பெருநகர் கருணாமூர்த்தி, விஜயகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *