செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு மாணவர்களுக்கு பட்டங்கள்

Spread the love

சிதம்பரம், ஜூன் 19–

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு படிப்பு நிறைவு செய்த பன்னாட்டு மாணவர்கள் 72 பேருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வே. முருகேசன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

பன்னாட்டு மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் விழா அண்ணாமலை பல்கலைக்கழக டெக்பார்க் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் பன்னாட்டு தொடர்பு மைய இயக்குநர் பேராசிரியர் டாக்டர் டி. ராம்குமார் பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அயல்நாட்டு மாணவர்களுக்கான கல்வி வசதிகளை விவரித்தார்.

தற்சமயம் பலகலைக்கழகத்தில் 31 நாடுகளை சேர்ந்த 317 மாணவ, மாணவியர் பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்பில் உள்ளனர். இதில் இந்த ஆண்டு படிப்பு நிறைவு செய்த 72 மாணவ, மாணவியர்களுக்கு படிப்பு முடித்த நிறைவு சான்றிதழ் பெற்றுள்ளனர்.

கலை, அறிவியல், பொறியியல் மற்றும் வேளாண் புல மாணவ, மாணவியர்க்கு இந்த ஆண்டு பட்டச்சான்றிதழ் வழங்கப்பட்டது என்று கூறினார்.

மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி துணைவேந்தர் டாக்டர் வே. முருகேசன் பேசுகையில், மாணவர்கள் தங்களது கல்வித்தகுதியுடன் அது சார்ந்த தனித்திறமையும் வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என வாழ்த்தினார்.

மொழியியல் புல முதல்வர் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் வி. திருவள்ளுவன், பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) பேராசிரியர் என். கிருஷ்னமோகன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்(பொறுப்பு) வி.செல்வநாராயனன், கலைப்புல முதல்வர் இ.செல்வராஜன், அறிவியல் புல முதல்வர் எஸ்.கபிலன், கடல்வாழ் உயிரின அறிவியல் புல முதல்வர் எம்.ஸ்ரீனிவாசன், பொறியியல் புல முதல்வர் கே.ரகுகாந்தன், கல்வியியல் புல முதல்வர் ஆர். ஞானதேவன், நுண்கலைப்புல முதல்வர் கே. முத்துராமன், வேளாண்புல முதல்வர் சாந்தா கோவிந்த், தொலைதூரக் கல்வி இயக்குனர் எம். அருள் ஆகியோர் பட்டச்சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், இந்திய மாணவர்கள் மற்றும் பன்னாட்டு மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *