செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் அறக்கட்டளை துவக்கம்

சிதம்பரம், ஜன. 7–

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் பேராசியர் சுப. திண்ணப்பன் ரூ.5 லட்சம் நிதியத்தில் சுப. திண்ணப்பன் – இந்திராள் அறக்கட்டளையை நிறுவினார். அறக்கட்டளையின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்பமை துணைவேந்தர் ராம. கதிரேசன் தலைமையேற்று பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ் மொழியும் ஆன்மீகமும் அறிவியும் வேறு வேறு அல்ல அவை ஒன்றோடு ஒன்று கலந்வை வாழ்விற்கு அன்பும் அறனும் அடிப்படை என்ன படிக்கிறோம் எங்கு படிக்கிறோம் என்பது முக்கியமல்ல எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றார்.

அறக்கட்டளையின் முதல் பொழிவினைப் பேராசிரியர் மருதூர் அரங்கராசன் மிழ்மொழியும் புதிய இலக்கணம் என்னும் தலைப்பில் பேசினார். இந்திய மொழிப்புல முதன்மையர் அரங்க. பாரி அறக்கட்டளைக் குறித்த அறிமுகவுரையை வழங்கினார். தமிழியியல்துறைத் தலைவர் கோ. பிலவேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் மருத்துவர் பாலாஜி சுவாமிநாதன், கலைப்புல முதன்மையர் விஜயராணி, நுண்கலை முதனைமையர் அருள்செல்வி, அறிவியல் புல முதன்மையர் ராமசாமி, பொறியியல் புல முதன்மையர் மு. கார்த்திகேயன், கல்வியியல் புல முதன்மையர் குலசேகர பெருமாள் பிள்ளை, மக்களியல் துறைத்தலைவர் ரவிசங்கர், மொழியியல் துறையின் இயக்குநர் சரண்யா, இந்தித் துறைத் தலைவர் காமக்கோடி, விலங்கியல் துறைத்தலைவர் சுப்பிரமணியம், கணிதவியல் துறைத்தலைவர் சம்பத் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் புல ஒருங்கிணைப்பார்களாகச் செயல்பட்ட மருத்துவர் ஜூனியர் சுந்தரேசன், மருத்துவர் தாமரைச்செல்வி, செந்தில் முருகன், இளங்கோ, பிரவீணா, பரணி, பல்கலைக்கழக நெறிமுறை அலுவலர் இரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரி இரத்தின சம்பத், துணைவேந்தரின் நேர்முகச் செயலர் பாக்கியராஜ், பேராசிரியர் சுப. திண்ணப்பன் உறவினர் முத்து மேலும் தமிழியல்துறைப் பேராசிரியர் வெங்கடேசன், இணைப்பேராசிரியர்கள் செந்தில் குமார், சதாசிவம், கணபதிராமன், பாலசுப்பிரமணியன், பாலு, உதவிப்பேராசிரியர்கள் மணி, அன்பு அரசன், தொலைதூரக்கல்வி தமிழ்ப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மேகநாதன், , மொழியியல் துறையின் இணைப்பேராசிரியர் துரை, சமூகவியல் துறையின் இணைப்பேராசிரியர் முத்துக்குமார் தொடர்பு அதிகாரி பாண்டியராஜன் தமிழியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வின் நிறைவாக தமிழியல்துறையின் உதவிப்பேராசியர் மற்றும் அறக்கட்டளை அமைப்பாளர் சே. கல்பனா நன்றி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *