சிதம்பரம், நவ. 5
அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறையில் 1976-79 பி.காம்., பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வணிகவியல் துறையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கத்தை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றினார். கல்விக்குழு உறுப்பினரும், வணிகவியல் துறைத் தலைவருமான கே.பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். கலைப்புல முதல்வர் கே.விஜயராணி தலைமையுரையாற்றினார். முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குநரும், பொறியியல்புல முதல்வருமான சி. கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் எஸ். சசிகலா, நல்லாசிரியர் ஜி. திருநாவுக்கரசு, எஸ். குருநாதன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இவர்கள் ரூ. 4 லட்சம் மதிப்பில் வணிகவியல் துறையில் இரண்டாம் தளத்திலுள்ள விரிவுரை அரங்கத்தையே புதுப்பித்து துறைக்கு அர்ப்பணித்தார்கள். முடிவில் முன்னாள் வணிகவியல் துறைத்தலைவர் ஜி.வசந்தி நன்றி கூறினார்.
வணிகவியல் துறை பேராசிரியர்கள், முன்னாள் தொலைதூர கல்வி இயக்கக இயக்குனர் ஆறுமுகம், தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மைய இயக்குனர் டி.சீனிவாசன், தத்துவவியல் துறைத்தலைவர் ஜெ.திருமால், மேலாண்மை துறைத்தலைவர் எம். அருள், நெறிமுறை அலுவலர் ரவிச்சந்திரன், முன்னாள் வணிகவியல் துறைத்தலைவர் ஆர். இளங்கோவன், துணைவேந்தரின் நேர்முக செயலர் ஜெ.எச்.பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.ரெத்தினசம்பத் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.