சிதம்பரம் ,ஆக-30 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத்தில்
சிஎஸ்ஐஆர்-ஜேஆர்எப்-நெட் பயிற்சி வகுப்புகள் பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர் இராம. கதிரேசன்
வழிக்காட்டுதலின் படி தொடங்கியது. நிகழ்வில் அறிவியல் புல தலைவர் டாக்டர்
எஸ். ஸ்ரீராம் சிறப்புரை ஆற்றினார். அவர், இவ்வகுப்புகள் மாணவர்களின்
அறிவுத்திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் இவ்வாயிப்பினை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார். இந்திய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்
(CSIR) நடத்தும் சிஎஸ்ஐஆர்-ஜேஆர்எப்-நெட் தேர்வு, நாட்டின் மிக
முக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும். இந்த தேர்வின் மூலம், ஆராய்ச்சித்
துறையில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்கள், Junior Research
Fellowship (JRF) மற்றும் பல்கலைக்கழகங்களில் Assistant Professor
பதவிக்கான தகுதியைப் பெறுகிறார்கள். இந்த மாதிரியான பயிற்சி வகுப்புகள்
மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற உதவும்.
சிறப்பு விருந்தினர்களாக TAF – IAS அகாடமியின் கிழக்கு மண்டலத் தலைவர்
மற்றும் அரசியல் துறைத் தலைவர் எம். சுபஸ்ரீ
மற்றும் கணித துறைத் தலைவர் ஆர். ராஜேஷ் குமார் கலந்து
கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவத்தை விளக்கி
உரையாற்றினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி, வேலைவாய்ப்பு
மற்றும் தொழில் முயற்சிகள் இயக்குநர் டாக்டர். கே. கிருஷ்ணசாமி
மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு இந்த வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும் என தெரிவித்தார். உதவி இயக்குனர் முனைவர்
ஜே. பத்மநாபன் இந்து மாதிரியான பயிற்சி வகுப்புகள் மற்ற புலங்களிலும்
தொடங்கப்படும் என கூறினார். மேலும் நிகழ்வின் தொடக்கத்தில், பயிற்சி
மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர். என். ராஜேந்திர பிரசாத்
வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். முடிவில் புள்ளியியல் துறையின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு
ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சி. சுப்பிரமணியன் நன்றி கூறினார் .
நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், துறை சார்ந்த வேலை வாய்ப்பு
அதிகாரிகள் உட்பட மாணவ, மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதன்
மூலம் மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் கல்வி நோக்கங்களை எளிதில்
அடைய முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.