சிதம்பரம், செப். 23
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், மத்திய புவி அறிவியல் அமைச்சகம், நிதி உதவியுடன் கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையம் மற்றும் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புண்ர்வு, வாழ்வாதார திட்டம், மத்திய வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இணைந்து சர்வதேச கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் தின விழா சாமியார் பேட்டை கடற்கரையில் நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இராம. கதிரேசன் மற்றும் பதிவாளர் ஆர். சிங்காரவேல் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் பி.சவுந்திரபாண்டியன், புல முதல்வர், கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்துவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் தொடக்க உரையாற்றி சுத்தப்படுத்துவதுற்கு தேவையான உபகரணங்களை வழங்கி, கொடியசைத்து துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அனைத்து பங்குதார்கள், சாமியார்பேட்டை மீனவ கிராம நிர்வாக தலைவர் நாகலிங்கம், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், சிலம்பிமங்கல ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ராஜேந்திரன், மற்றும் உறுப்பினர்கள், பிச்சாவரம் வனசரகர் இக்பால் மற்றும் வன சரக அதிகாரிகள். மீன்வளத்துறை ஆய்வாளர் விஜ்வந்த் கடலோர காவல் துறை அதிகாரிகள், புதுச்சத்திர காவல் நிலைய அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திட்ட ஒருங்கினைப்பாளர் பி.முருகேசன், இணைபேராசிரியர் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர்கள், பேராசிரியர்கள் ஆனந்தன், சிவக்குமார், தெய்வசிகாமணி, சரவணன், ஹான் சூஜி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர்கள் ரமேஷ், தங்கராஜ், தேசிய மாணவர் படை ஒருங்கினைப்பாளர் விஜயானந்த், மற்றும் சுற்றுச்சூழல் தகவல் மையம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கடலோரப் பகுதிகளை சுத்தப்படுத்துவதின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினர்.
நிகழ்ச்சியில் தூய்மைப்படுத்துவதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு திரளணி மேற்கொள்ளப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்கள் மற்றும் கிராமத்தினர் சாமியார்பேட்டை கடற்கரையில் சேர்ந்துள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே இனம் பிரித்து (சுமார் 1000 கிலோ) சிலம்பி மங்களம் ஊராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சேகரித்த அனைத்து குப்பைகளையும் எடுத்துச்சென்றனர். முடிவில் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.