சிறுகதை

அண்ணனா? தம்பியா ? | லோகநாதன்

Spread the love

இன்னும் அரை மணி நேரத்தில் ஓட்டு எண்ணப்பட்டு தேர்தல் முடிவு தெரிந்துவிடும்.
ராமமூர்த்தியும் அவருடைய கட்சி தொண்டர்களும் பரபரப்போடும் இறுக்கத்தோடும் இருக்க…
இன்னொரு புறம் சேகரும் அவருடைய கட்சி தொண்டர்களும் பரபரப்போடும் பதற்றமாகவும் இருந்தார்கள்.
கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று ஆர்வமாக பேச ஆரம்பித்தார்கள்.
எந்த முறையும் இல்லாமல் இந்த முறைதான் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு என ஒருவர் சொல்ல
ஏன் என்று வெளியூர்காரர் ஒருவர் கேட்க
அண்ணன் ராமமூர்த்தி எதிர்கட்சி சார்பாகவும் தம்பி சேகர் ஆளுங்கட்சி சார்பாகவும் தேர்தல்ல நின்னுருக்காங்க. அண்ணன் வெற்றிபெறுவாரா, தம்பி வெற்றி பெறுவாரான்னு புரியாம மக்கள் தவியா தவிச்சுக்கிட்டு இருக்காங்க. இந்த காலத்துல அண்ணன் என்ன? தம்பி என்ன? எல்லாம் பணம், காசு, பதவிதான் முக்கியம். அது இருந்தாதான் மனுஷனாகவே மதிக்கிறாங்கன்னு நினைக்கிறாங்க.
அரை மணி நேரம் சென்றது.
ஒலிபெருக்கில் ராமமூர்த்தியை விட சேகர் 20,000. ஓட்டு வித்தியாசத்தில்முன்னிலை என்று அறிவித்தார்கள். உடனே சேகரும் அவருடைய தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் பட்டாசு வெடித்து மேளதாளத்தோடு உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
அரை மணி நேரம் சென்றது.
ஒலிப்பெருக்கியில் ராமமூர்த்தியை விட சேகர் 20,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று அறிவித்தார்கள். உடனே சேகரும் அவருடைய தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் பட்டாசு வெடித்து மேளதாளத்தோடு உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
அதை பொறுக்க முடியாமல், வாடிய முகத்துடன் ராமமூர்த்தி விர்ரென்று காரில் ஏறி விட்டுக்குச் சென்றார்.
அங்கு அறையில் உட்கார்ந்துகிட்டு மது அருந்த ஆரம்பித்தார்.
இதபாருங்க தலைவரே, வெற்றி, தோல்வி எல்லாம் சாதாரணம். அதுக்காக கோவப்படறதோ, ஆத்திரப்படறதோ பயன் இல்ல என தொண்டர்கள் சொன்னார்கள்.
நான் தோல்வி அடைஞ்சதை பத்திக்கூட கவலைப்படல. என் எச்ச பாலை குடிச்சு வளர்ந்தவன்கிட்ட தோல்வி அடைஞ்சுட்டோமேன்னு தான் அவமானமா இருக்கு என கோபத்தோட சொன்னார் ராமமூர்த்தி.
சரி தலைவரே நாளைக்கு பார்க்கலாம்னு சொல்லி விட்டு கிளம்பிச் சென்றார்கள் தொண்டர்கள்.
இரவு 12 மணி ராமமூர்த்திக்கு திடீர் என்று தூக்கம் தெளிந்து படுக்கையிலிருந்து எழுந்து போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தம்பி சேகர் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார். அங்கு வீட்டு சுவர் மீது ஏறி குதித்து மாடி வழியாக ஏறி படுக்கை அறைக்கு போனார்.
அங்கு ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த சேகர் டமால் என பாத்திரம் உருண்ட சத்தம் கேட்டு அலறிக் கொண்டு எழுந்தார்,
எதிரில் நின்ற ராமமூர்த்தியைப் பார்த்து,
‘‘அண்ணே நீங்களா? ஆமாடா தம்பி, நீ வெற்றி பெற்றதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என சொல்லிக் கட்டித் தழுவினார்.
சேகர் மெய்சிலிர்த்துப் போனார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *