வாழ்வியல்

அணுக்களை மாற்றி அமைத்து அவற்றில் புதிய வகை பொருள்களை உருவாக்குவதே நானோ தொழில்நுட்பம்

அணுக்களை மாற்றி அமைத்து அவற்றில் புதிய வகை பொருள்களை உருவாக்குவதே நானோ தொழில்நுட்பம் ஆகும்.

நானோ தொழில்நுட்பம் பற்றி முதலில் பேசியவர் அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்டு ஃபெயின்மான். இதற்காக அவர நோபல் பரிசு பெற்றவர்.

விஞ்ஞானி ரிச்சர்டு ஃபெயின்மான் 1959 டிசம்பர் 29- ல் “There’s Plenty of Room at the Bottom,” (கீழே ஏராளமாக இடம் உள்ளது) என்ற தலைப்பில் ஒரு உரையாற்றினார்.

அதுவே நானோ தொழில்நுட்பம் பற்றிய முதல் உரையாகக் கருதப்படுகிறது. அதில் அவர் “அணுக்களை மாற்றி அமைத்து அவற்றில் நாம் தலையிடுவதன் மூலம் புதிய வகையான பொருள்களை உருவாக்கலாம்.

அதே தொழில்நுட்பத்திலேயே சின்ன இயந்திரங்களை உருவாக்கி, அவற்றின் மூலமே அணுக்களை மாற்றியமைத்து அந்தப்பணியையும் யந்திரமயமாக்கலாம்.

எதிர்காலத்தில் டாக்டர்களை நாம் விழுங்குவோம். அறுவை சிகிச்சை செய்ய சின்ன ரோபாட்களை நமது உடலுக்கு உள்ளே அனுப்புவோம். பொருள்கள் சின்னதாக மாறுவதால் புவியீர்ப்பு விசை செயலிழந்து போகும் நிலை வரலாம். வேறு சில விசைகளும் வருங்காலத்தில் முக்கியத்துவம் பெறும்” என்றார்.

அவரது கருத்துக்களின் விளைவாக இன்று அணுக்களை ஆராயும் மிக நுண்ணிய நவீன கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *