செய்திகள்

அட்சய திருதியை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 18 டன் தங்க நகைகள் விற்பனை

சென்னை, மே 4–

அட்சய திருதியை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 18 டன் தங்கம் விற்பனை ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று அட்சய திருதியை நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நன்நாளில் தங்க நகை வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்ற ஐதீகம் தமிழக மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே நேற்றைய தங்க நகைகள் விற்பனை வெளிப்படுத்துகிறது.

18 டன் விற்பனை

இது குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகையில், அட்ஷய திருதியை நாளான நேற்று எதிர்பார்த்த அளவை விட கூடுதலாகவே விற்பனை இருந்ததாக தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் 18 டன் தங்கம் விற்பனையாகியுள்ளதாக கூறும் தங்க நகை விற்பனையாளர்கள், இது 2019 ம் ஆண்டை விட 30 விழுக்காடு கூடுதல் விற்பனை என்று கூறி உள்ளனர்.

கொரோனா காரணமாக 2020, 2021ஆம் ஆண்டு விற்பனை குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விற்பனை அதிகரித்துள்ளது. சாதாரணமாக மற்ற நாட்களில் தினசரி 7 முதல் 8 டன் வரையில் தங்கம் விற்பனையாகும் என்றும் வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.