செய்திகள்

அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு சிங்கப்பூர் பிரதமர் லீ ராஜினாமா

Makkal Kural Official

சிங்கப்பூர், ஏப். 16–

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மே 15 ந்தேதி ராஜினாமா செய்வதைத் தொடர்ந்து, துணை பிரதமரான வோங், புதிய பிரதமராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நாட்டின் பிரதமர் பதவியை ஏற்று சுமார் 20 ஆண்டுகள் ஆகிறது. நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, மே 15 ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவிதுள்ளார். கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் வாரிசு திட்டங்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, லீ திட்டமிட்டதை விட தாமதமாக ஆட்சியை விட்டு வெளியேறுகிறார். 72 வயதான லீ, ஆகஸ்ட் 12, 2004 அன்று சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை மாற்றம் முக்கியம்

தனது ராஜினாமா தொடர்பான சமூக வலைதள பதிவில், ‘கடந்த நவம்பரில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தேன். அதன்படி, மே 15, 2024 அன்று எனது பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகுவேன். அதே நாளில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அடுத்த பிரதமராக பதவியேற்பார். எந்த நாட்டிற்கும் தலைமை மாற்றம் என்பது குறிப்பிடத்தக்க தருணம். லாரன்ஸ் மற்றும் நான்காம் தலைமுறை குழுவினர் குறிப்பாக தொற்றுநோய்களின் போது, மக்கள் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைத்துள்ளனர்.

ஃபார்வர்டு சிங்கப்பூர் பயிற்சியின் மூலம், அவர்கள் பல சிங்கப்பூர் மக்களுடன் இணைந்து நமது சமூகத் தொடர்பைப் புதுப்பிக்கவும், புதிய தலைமுறைக்கான தேசிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கவும் பணியாற்றியிருக்கிறார்கள். இவை எப்போதும் அரசாங்கத்திற்கு முதன்மையானதாக இருக்கும். லாரன்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு உங்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும். சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறும் அனைத்து சிங்கப்பூரர்களையும் கேட்டுக் கொள்கிறேன்’ என லீ சியென் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *